சீனாவின் தியன்ஜின் நகரில் 50 பேருடன் பயணித்த பஸ்ஸொன்று உயரத் தடை கட்ட மைப்பு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது இருவர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
மேற்படி உயரத் தடுப்பு பகுதியின் வழியாக பயணிப்பதற்கு வரையறுக்கப்பட்ட உயரம் 2.8 மீட்டராக இருந்த நிலையில், குறிப்பிட்ட 59 இருக்கைகளைக் கொண்ட பஸ் வேகமாக அந்த வீதியின் வழியாக பயணித்த வேளை குறிப்பிட்ட தடுப்பு கட்டமைப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதன் போது அந்த உயரத்தடை கட்டமைப்பின் உலோகப் பகுதி பஸ்ஸின் மேற்பக்கத்தை சேதப்படுத்தியுள்ளது. பட்டப் பகலில் இடம்பெற்ற இந்த விபத்தையடுத்து அந்த பஸ்ஸின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மேற்படி விபத்து தொடர் பில் போலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment