Saturday, 31 January 2015

ஒரே விழாவிற்கு இவ்வளவு பிரபலங்களா..? இப்போ தெரிதா கேப்டனின் பவர்..


விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரிக்கும் இப்படத்தை சுரேந்தர் இயக்கியுள்ளார். இப்படத்தில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றார்கள். ஒருவர் நேஹா. இவர் 2010ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்றவர். இன்னொருவர் புதுமுகம் சுப்ரா நடிக்கிறார்.
இவர்களுடன் ரஞ்சித், தேவயானி, போஸ் வெங்கட், தலைவாசல் விஜய், சிங்கம் புலி உட்பட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயகாந்தும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை (ஜன 31) 6 மணிக்கு வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. விழாவிற்கான அழைப்பிதழ் திரையுலகினருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதில் கலந்து கொள்கிறவர்கள் பெயர்கள் இடம்பெற வில்லை.
இந்த நிலையில் சகாப்தம் படத் தயாரிப்பு தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் விழாவில் ரஜினி, கமல், விஜய், சூர்யா, விக்ரம் கலந்து கொள்வதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த செய்தி குறிப்பு வருமாறு: நாளை (இன்று) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள ​​சகாப்தம் இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், சூர்யா, விக்ரம், சரத்குமார், விஷால், பிரபு, விக்ரம் பிரபு, கெளதம் கார்த்திக், சிபிராஜ், சிம்பு, டி.ராஜேந்தர், தனுஷ், விமல், கருணாஸ், வெங்கட் பிரபு, கிருஷ்ணா, பிரேம்ஜி, அர்ஜுன், தியாகராஜன், பிரசன்னா, அதர்வா, ஷக்தி, பாண்டியராஜன், ப்ரித்வி, ராஜுசுந்தரம், பாக்யராஜ், சாந்தனு, ஜெயம் ரவி உள்ளிட்ட ஏராளமான நடிகர்களும்,
ஷங்கர், முருகதாஸ், கெளதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், பாண்டிராஜ், விஷ்ணுவர்தன், மிஸ்கின், கங்கை அமரன், பேரரசு, மகிழ்திருமேணி, நலன் குமாரசாமி, செல்வராகவன், ஜெயம் ராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கஸ்தூரி ராஜா, விக்ரமன், ஆர்,கே.செல்வமணி, பூபதிபாண்டியன், சுராஜ், மாதேஷ், பாலாஜி சக்திவேல், பிரபு சாலமன், கிருஷ்ணா​, ​சுசீந்திரன்​ ​ உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்களும், இன்னும் ஏராளமான முன்னணி தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்களும் கலந்துகொள்ள உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
அடேங்கப்பா அவ்வளவுதானா..

No comments:

Post a Comment