Friday, 30 January 2015

ஜெண்டில்மேன் ஸ்டைலில், வாட்ஸாப் திருடனுக்காக போலீசார் நேர்த்திக் கடன்!!


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி, கத்தி முனையில் வேலை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் ஆசிரியர் ஒருவரிடம் மிரட்டி, நகை பறித்த திருடன் நீராவி முருகன் வாட்ஸாப் வீடியோ மூலம் சென்னையில் வலம் வந்தான்.
இந்த வீடியோவை வைத்தே அவனை போலீஸ் மோப்பம் பிடித்துச் சென்று தூத்துகுடியில் வளைத்துப் பிடித்தது. இந்த சம்பவத்தை அடுத்து, இந்த வாட்ஸாப் திருடன் நீராவி முருகன் பிடிபட்டதிற்காக, காவலர்கள் ஜெண்டில் மேன் படத்தில் வருவது போல, நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் சுடலைமாட சுவாமி கோயிலுக்குச் சென்று மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்தியுள்ளனர்.
நீராவி முருகனை போலீசார் தேடி வந்த போது, அவன் தவறாமல் சீவலப்பேரி சுடலைமாட சுவாமி கோயிலுக்கு வந்து மொட்டை போட்டுக் கொண்டு செல்வது வழக்கம் என்று கேள்விப்பட்டுள்ளனர். இதன் பின் அந்த கோவிலின் ஐதீகம் பற்றி கேள்விப்பட்ட போது, திடுபவர்கள், பொய் கூறுபவர்களை அங்கு கொண்டு வந்து சத்தியம் வாங்கினால் உண்மையை மறைக்க முடியாது என்றும் அதே போல், திருடுபவர்கள் கொள்ளை அடிப்பவர்கள் இங்கு தங்கள் திருட்டுக்கு காணிக்கை செலுத்துவது வழக்கம் என்றும் தெரிய வந்துள்ளது.
இதன்படி தான் நீராவி முருகனும், அவ்வப்போது சுடலமட சாமிக்கு திருட்டுக்கு காணிக்கையாக, ஆடு கோழி என பலி இடுவதாகவும் போலீசார் கேள்விப்பட்டுள்ளனர். உடனே காவலர்கள், சுடலமாட சாமியிடம், மக்களுக்கு தொல்லை கொடுக்கும் நீராவி முருகனை எப்படியாவது, எங்களிடம் சிக்க வைத்து விட்டால் நாங்கள் இங்கு வந்து மொட்டை போட்டுக் கொள்கிறோம் என்று வேண்டியுள்ளனர்.
அதன்படியே நீராவி முருகன் நேற்றைய முந்தினம் பிடிபட்டான். எனவே ஏட்டு விஜயகுமார், போலீஸ்காரர் புஷ்பராஜ் ஆகியோர் நெல்லை சென்று மொட்டை அடித்து நேர்த்தி கடன் செலுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், நீராவி முருகனின் கூட்டாளி கோவில்பட்டியை சேர்ந்த அய்யாத்துரை (38) வடபழனியில் உள்ள மேன்சனில் நேற்றிரவு போலீசில் பிடிபட்டுள்ளான்.
இவனிடமிருந்து நீராவி முருகனும், இவனும் சேர்ந்து செய்த பல திடுக்கிடும் திருட்டுகள் வெளிவந்துள்ளன. இந்த திருட்டுகளைக் கேட்டு போலீஸ் காரர்களே தலை சுற்றிப் போய் விட்டனராம். இது குறித்து போலீசாரிடம் அய்யாத்துரை கூறியதாவது:
கோவில்பட்டியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் யானை தந்தம் கேட்பதாக எங்களுக்கு தெரியவந்தது. இதனால் அந்த தொழிலதிபரை நீராவி முருகனும் நானும் சேர்ந்து கடத்தி ரூ. 2 லட்சம் பறித்தோம். அவரது காரில்தான் சென்னைக்கு வந்தோம். கோயம்பேடு அருகே நாங்கள் வந்த காரை மடக்கிய போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பினோம்.
நாங்கள் திருடிய நகைகளை காஞ்சிபுரத்தில் உள்ள சேட்டுவிடம் விற்றபோது பணம் கொடுக்காமல் ஏமாற்றினார். இதனால் தங்க கட்டிகள் இருப்பதாகவும், ரகசிய இடத்தில் வந்து வாங்கி கொள்ளுமாறும் சேட்டுவை அழைத்துச்சென்று அவரிடம் 2 லட்சம் ரூபாய் பறித்தோம். சென்னையை சேர்ந்த வலம்புரி சங்கு வியாபாரி ஒருவர் அவருடைய செல்போனை என்னிடம் அடகு வைத்தார்.
அந்த நம்பருக்கு தாம்பரத்தை சேர்ந்த வங்கி பெண் அதிகாரி ஒருவர் பேசும்போது வலம்புரி சங்கு வேண்டும் என்றார். இதனால் மெரினா பீச்சில் ஒரு சங்கை வாங்கி இது வலம்புரி சங்கு என்று கூறி ரூ. 20 ஆயிரம் பெற்றோம். வீட்டுக்கு சென்ற அந்த அதிகாரி, போலியான சங்கு கொடுத்துவிட்டீர்கள். பணத்தை கொடுங்கள் என்றுமிரட்டினார்.
இதனால் அந்த பெண் வீட்டுக்கு சென்றோம். யாரும் இல்லாததால் இருவரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தோம். அந்த காட்சியை செல்போனில் படம் பிடித்து கொண்டு பணம் தேவைப்படும்போது அதை காட்டி மிரட்டி 20 பவுன் வாங்கினோம். அந்த பெண்ணை பலமுறை மிரட்டி உல்லாசம் அனுபவித்தோம். தூத்துக்குடியை சேர்ந்த சுவாமி என்பவருக்கு கோயில் தங்க கலசம் தேவை என்பதை அறிந்து அவரிடம் 15 பவுன் நகையை பறித்தோம்.
இவ்வாறு அய்யாத்துரை தெரிவித்துள்ளார். இதையடுத்து, அய்யாதுரை ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டான்.

No comments:

Post a Comment