Thursday, 29 January 2015

இன்றைய தினம்....!! (ஜனவரி 30)


ஜனவரி 30
இந்திய தேசத் தந்தை மகாத்மா இறந்த தினம்..!!
மகாத்மா என்று இந்திய மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டு, இந்திய விடுதலைப் போரை தலைமைதாங்கி நடத்தி வெற்றி கண்ட, "விடுதலை இந்தியாவின் தந்தை" உத்தமர் காந்தி உயிர் துறந்த தினம் இன்று.
இத்தினம் இந்திய விடுதலைக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
குஜராத்திலுள்ள போர்பந்தரில், அக்டோபர் 2ம் நாள், 1869 ஆம் ஆண்டு கரம்சந்த் காந்தி மற்றும் புத்லிபாய் என்பாருக்கு பிறந்தார் மகாத்மா காந்தி. இவரது இயர் பெயர் மோகன்லால் கரம்சந்த் காந்தி ஆகும். குஜராத்தை தாய்மொழியாக கொண்ட காந்திக்கு பள்ளிப்படிப்பில் அதிக ஈடுபாடு இல்லை.
எனினும் பள்ளிப்படிப்பை செவ்வனே முடித்தார். படிப்பை தொடர்ந்து இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் எனும் வழக்கறிஞர் சிறப்பு படிப்பை படித்தார். விருப்பமான வேலையேதும் இல்லாத நிலையில், வேலை நிமித்தமாக தென்னாப்ரிக்காவிற்கு சென்றார் காந்தி.
அங்கு ஆங்கிலேயர்கள் கறுப்பின மக்கள் மற்றும் இந்தியர்கள் மீது கொண்டிருந்த நிறவெறி மற்றும் பாகுபாடுகள் காந்திஜியை மிகவும் பாதித்தது. அங்கு தான் முதன் முதலில் காந்தி சத்யாகிரகத்தை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து இந்தியா திரும்பிய காந்தி 1924ம் ஆண்டு தன் சமூக நலன்களின் பயனாக இந்திய தேசிய காங்கிரசின் தலைவரானார்.
இந்திய காங்கிரசு இயக்கத்தின் தலைமை பொறுப்பேற்றவுடன் சுதேசி, சத்யாகிரகம் போன்ற கொள்கைகளை இயக்கத்தில் சேர்த்து காங்கிரசை ஒரு தேசிய விடுதலை இயக்கமாக மாற்றினார். 1930ம் ஆண்டு மார்ச் 2ம் நாள் இந்தியாவில் இந்தியர்கள் தயாரிக்கும் உப்பிற்கு ஆங்கிலேயர்கள் விதித்த வரிக்கு எதிர்பு தெரிவித்து குஜராத்திலிருந்து 240 மைல் தொலைவிலுள்ள தண்டிக்கு நடைபயணம் மேற்கொண்டார்.
இது நாடெங்கிலும் உப்பு சத்யாகிரகமாக வெடித்தது. உப்பு சத்யாகிரகம் செய்தமைக்காக காந்தி மற்றும் அவருடன் சத்யாகிரகத்தில் ஈடுபட்டோர் அனைவரும் கைது செய்து சிறையிலடைத்தது பிரிட்டிஷ் அரசாங்கம். இந்த கைதிற்கு நாடெங்கி லிருந்தும் பெரும் எதிர்புப் பேரலை வீசியது. வேறு வழியில்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதியில் வரியை நீக்கச் சம்பதித்தது.
உப்பு சத்தியாகிரகம் இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதை அடுத்து 1942ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார். இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது.
ஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், இந்திய-பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார். 1948ம் ஆண்டு பிப்ரவரி 30ம் நாள் நாதுராம் கோட்சே என்பவர் காந்தியை துப்பாக்கியால் இரண்டு முறைச் சுட்டு கொன்றார். நாடே அத்தினம், துக்கத் தில் மூழ்கிற்று.
காந்தி குறித்த விமர்சனங்கள்
காந்தி இந்திய விடுதலைக்காக பெரும்பாடு பட்டிருப்பினும், இந்து சமயத்தின் மீது அதிக ஈடுகொண்டவராதலால், தாழ்த்தப்பட்டவர்களும் கோயிலுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என போராட்டங்கள் எழுந்த பொழுது, அனைவரும் இந்து மதத்தின் அறத்தைப் பேண வேண்டும் என காந்தி சொன்னார் என அம்பேத்கர் எழுதி உள்ளார்.
திருநெல்வேலி சைவ சித்தாந்த குருகுலப் பள்ளியில், சமூகத்தில் உயர்ந்த வகுப்பினர்க்கு தனி விடுதி, மற்றவர்க்கு தனி விடுதி என கடைபிடிக்கப்பட்டதை, இந்து மத அறத்தின்படி சரி என காந்தி வாதிட்டார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே, பெரியாரை பேராய கட்சியிலிருந்து (congress party) வெளியேற முடிவெடுக்க தள்ளியது.
பகத் சிங் கின் தூக்குதண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குதண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டார். இது மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
காந்தி ஜெயந்தி
காந்தியை பெருமைப் படுத்தும் விதமாக, காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஐ, இந்திய அரசு காந்தி ஜெயந்தியாக அறிவித்தது. இந்நாளில் மட்டுமாவது இந்திய மக்கள் அனைவரும் காந்தியின் மதுவிலக்கு உள்ளிட்ட கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது அரசின் கோரிக்கை.
அனைத்துலக வன்முறையற்ற நாள் (International Day of Non-Violence)
ஜூன் 15 2007ல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அக்டோபர் 2ம் நாளை அனைத்துலக வன்முறையற்ற நாளை அறிவித்தது. உலகில் வன்முறையை ஒழித்து அமைதியை நிலை நாட்ட மகாத்மா காந்தி அரும் பாடுபட்டதை கௌரவிக்கும் பொருட்டு அவர் பிறந்த நாளை சர்வதேச வன்முறையற்ற தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தனது வாழ்நாள் முழுவதும் அகிம்சையைக் கடைப்பிடித்து அதன் உன்னதத்தை அனைவருக்கும் உணர்த்திய மகாத்மா காந்தியின் கொள்கைகளை உலக நாடுகள் அனைத்தும் பறைசாற்றி, அகிம்சையின் மகத்துவத்தை அறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. அஹிம்சை, பரந்த மனப்பான்மை, மனித உரிமை, சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றுக்கு மதிப்பளிப்பது முக்கியம் என அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1648 - எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்துக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் உடன்பாடாகியது.
1649 - பொதுநலவாய இங்கிலாந்து என்ற குடியரசு அமைக்கப்பட்டது.
1649 - இளவரசர் சார்ல்ஸ் ஸ்டுவேர்ட் இரண்டாம் சார்ல்ஸ் தன்னை இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் மன்னனாக அறிவித்தான். எனினும் எவரும் அவனை அங்கீகரிக்கவில்லை.
1933 - அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராக (Chancellor) பதவியேற்றார்.
1943 - இரண்டாம் உலகப் போர்: உக்ரேனில் லேத்திச்சிவ் என்ற இடத்தில் யூதர்கள் ஆயிரக்கணக்கில் நாசிகளால் கொல்லப்பட்டனர்.
1964 - ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது.
1976 - தமிழ்நாட்டில் மு. கருணாநிதியின் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.
2000 - கென்யாவின் விமானம் ஒன்று அட்லாண்டிக் கடலில் ஐவரி கோஸ்ட் கரையில் வீழ்ந்ததில் 169 பேர் கொல்லப்பட்டனர்.
2003 - பெல்ஜியம் ஒருபால் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியது. 2006 - தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் ஒரு பெண் உட்பட 7 இலங்கைத் தமிழர் மட்டக்களப்பு, வெலிக்கந்தையில் கடத்தப்பட்டனர். இவர்கள் இறந்து விட்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.
இன்றைய சிறப்பு தினம்
உலக தொழுநோய் ஒழிப்பு நாள்
அகிம்சை தினம் மற்றும் அமைதி இயக்க தினம் (ஸ்பெயின்)

No comments:

Post a Comment