Thursday, 29 January 2015

பிப்ரவரி 14ஆம் தேதியில் எந்திரன் 2..? தயாராக உள்ளார் ஷங்கர்..?


பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் ஐ படத்தை எடுத்துக்கொண்டிருக்கும் போதே இந்த படத்தை முடித்த பிறகு எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளிவந்தன. தற்போது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் ஷங்கர் விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடுவார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் பிப்ரவரி 14ஆம் தேதி இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளிவந்த ’எந்திரன்’படம் தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் என்ற பெருமையை பெற்றது.
ஏ.ஆர் ரகுமானின் பாடல்களும், பின்னனி இசையும் இப்படத்தை உலக தரத்துக்கு எடுத்து சென்றது. அது மட்டும் இல்லாமல் உலக அழகி ஐஸ்வர்யா ராய் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படி பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்த இப்படம் வசூலிலும் பட்டையை கிளப்பியது. ரூ 375 கோடியை இந்தப் படம் வசூலித்ததாக படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க ஷங்கர் அதிரடியாக திட்டமிட்டு இருக்கிறார் என்று தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளது.
எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாகத் தயாராகும் என மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஷங்கர் கூறியிருந்தார். ஆனால் ரஜினியின் உடல் நிலை காரணமாக அது தொடங்கவில்லை.பின்பு அமீர்கானை வைத்து இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது எந்திரன் இரண்டாம் பாகத்தின் முழு கதையும் தயார் நிலையில் உள்ளதாகவும், ரஜினி தான் ஹீரோ என்றும் ஷங்கர் கூறியதாக செய்திகள் வெளியாகின. அதோடு படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என்றும் அவர் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷங்கரே இதனை ஐதராபாதில் தெரிவித்ததாக அதில் தெரிவித்திருந்தனர். ஆனால் இதுகுறித்து ஷங்கர் தரப்பில் நாம் விசாரித்தபோது சரியான பதில் எதும் கிடைக்கவில்லை...

No comments:

Post a Comment