Thursday, 29 January 2015

43 Tesco சூபர்மார்கெட்கள் கிளோஸ்!! 2000 பேருக்கு வேலை பறிபோகுது!!


பிரிட்டிஷின் பிரபல சூப்பர் மார்கெட் நிறுவனமான டெஸ்கோ, பிரிட்டிஷில் 43 சூப்பர்மார்கெட்களை மூடப்போவதாக அறிவித்துள்ளது. இதனால், சுமார் 2000 பேருக்கு வேலை பறிபோகும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. பிரிட்டிஷில் சுமார் 97 ஆண்டுகளாக இயங்கி வரும் மல்டிநேஷ்னல் நிறுவனம் டெஸ்கோ.
இலாபத்தின் அடிப்படையில் உலகின் மூன்றாவது பெரிய நிறுவனம் என்ற பெயரை எடுத்த இந்நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக வருவாயில் பிந்தங்கி விட்டதாம். வளர்ந்து வரும் தொழில் போட்டிக்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில், தற்போது இந்நிறுவனம், அதிக வருவாய் இல்லாத 43 கடைகளை மூடுவது என்ற முடிவிற்கு வந்துள்ளது.
கடைகள் மூடப்படுவதால், அங்கு வேலை செய்து வரும் 2000 பேர் வேலை இழக்க நேரிடும். இது மட்டுமல்லாது, வருவாய்ப் பின்னடைவால் டெஸ்கோ திறக்க இருந்த சுமார் 50 சூப்பர் மார்கெட்டுகள் தற்போது திறக்கப்படாமல் இருக்கின்றனவாம்.
டெஸ்கோ நிறுவனத்தின் சி.இ.ஓ., டேவ் லூயில் கூறுகையதாவது,
“கடந்த ஆண்டே நிறுவனத்தின் செயல்திறன் பாதிக்கு பாதியாக வீழ்ந்தது. எனவே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இங்கிலாந்தில் மொத்தம் 43 வருவாய் குறைவான சூபர்மார்கெட்டுகளை மூடுவதற்கு முடிவு செய்தோம்.”
”இந்த முடிவு மிகவும் கடினமான ஒன்று தான். பல காலமாக முன்னேற்றத்திற்காக பாடுபட்ட, பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இதனால் பாதிப்பிற்குள்ளாகிறார்கள் என்பது எனக்கும் புரிகிறது.”
”இருந்தாலும், நிறுவனத்தை தொடர்ந்து நடத்த இம்முடிவு அவசியமான தாகி விட்டது. வேலையிழக்கும் தொழிலாளர்களுக்கு இயன்றவரை வேறு கிளைகளில் வேலை பெற்றுத் தரப்படும்.” என்று கூறினார்.
இந்த அதிரடி முடிவால், 12 டெஸ்கோ மெட்ரோ ஸ்டோர்கள், 12 எக்ஸ்பிரஸ் கன்வீனியன்ஸ்(EXPRESS CONVENIENCE) ஸ்டோர்கள், 6 சூப்பர் ஸ்டோர்கள், 6 ஹோம் பிளஸ் அவுட் லெட் ஸ்டோர்கள் என மொத்தம் 43 ஸ்டோர்கள் இங்கிலாந்தில் மூடப்பட இருக்கின்றன.
இதில், 12 எக்ஸ்பிரஸ் ஸ்டோர்களும், 6 ஹோம்பிளஸ் ஸ்டோர்களும் வரும் மார்ச் 15ம் தேதி மூடப்பட இருக்கிறதாம். 6 சூப்பர் ஸ்டோர்களும், 12 மெட்ரோ ஸ்டோர்களும், வரும் ஏப்ரல் 1ம் தெதி மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment