Thursday, 29 January 2015

3 மாதத்தில் 7 கோடி ஐ போன் விற்பனை!! வராலாற்றில் சாதனை படைத்தது ஆப்பிள்!!


ஸ்மார்ட் போன்களில் பெஸ்ட் என்ற பெயர் பெற்று முன்னணியில் இருப்பது ஆப்பிள். இந்நிறுவனம், உலக அளவில் மிகவும் அதிகமான காலாண்டு லாபம் ஈட்டி சாதனை புரிந்துள்ளது. உலகம் முழுவதும், இயங்கி வரும் இந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு எல்லா நாடுகளிலும் நல்ல மவுசு உண்டு.
தரத்திற்கேற்ப இதன் விலையும் டாப்பாகத் தான் இருக்கும். சென்ற ஆண்டு உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஐபோன் 6 மற்றும் பெரிய தொடுதிரை கொண்ட 6 பிளஸ் என்ற இரண்டு புதிய ஐபோன்களை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதனை அடுத்து சென்ற காலாண்டுக்கான வருவாயை கடந்த செவ்வாய்கிழமை வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம். இதன் படி, கடந்த காலாண்டு மட்டும் இந்திய மதிப்பில் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி இலாபம் ஈட்டியுள்ளது. உலக அளவில் இதுவரை எந்த நிறுவனும், இந்த அளவு இலாபம் ஈட்டியதில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிறுவனம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 30 சதவீதம் அதிக இலாபத்தை ஈட்டியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதியில் இருந்து, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 74.5 மில்லியன் ஐபோன்களை விற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபோன்களின் விற்பனை அதிகரித்து இருந்த போதும், ஆப்பிள் நிறுவனத்தின், ஐபேட்(iPad) கடந்த ஆண்டை விட 22 சதவீதம் விற்பனையில் குறைந்து விட்டதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத்த ஐபோன்விற்பனையில் 70 சதவீதம் சீனாவில் தான் விற்பனை செய்யப்படுகிறது என்றும் ஆப்பிள் நிறுவனத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாம்சங் போன்ற நிறுவனங்கள், வித விதமான போன்களை வெளியிட்டு வரும் வேளையில் ஆப்பிள் நிறுவனம், ஐபோன் என்ற ஒரே ஒரு போனையும், ஐபேட், ஐபாட், ஆகிய மிகக் குறைந்த பொருட்களைக் கொண்டு இந்த அளவு இலாபம் ஈட்டியது அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. இவற்றோடு இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம், அதி நவீன ஸ்மார்ட் வாட்சான, ஐவாட்ச் என்ற சாதனத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
ஐபோனில் உள்ள பெரும்பாலான தொழில்நுட்பங்களையும் பெற்றுள்ளது இந்த ஐ வாட்ச். அது மட்டுமல்லாது, ஐபோனின் அனைத்து வசதிகளையும் இந்த வாட்ச் மூலமாகவே இயக்க இயலும் என்பது இதன் சிறப்பம்சம். இருந்தாலும், ஐவாட்ச் அதிகமான விலை காரணமாக, மக்களிடையே அந்த அளவு வரவேற்பை பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment