Wednesday, 28 January 2015

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: காசுக்கு ஓட்டு போடுபவர்களை பிடிக்க மாஸ்டர் பிளான்!!


ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வாக்களர்களை வாங்குவதைத் தடுக்க, ஒரு புதிய திட்டத்தை வைத்திருப்பதாகவும் அதை வரும் 31ம் தேதி அறிவிக்கப் போவதாகவும், தமிக தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல், தமிழ்நாட்டின் முக்கிய தேர்தலாகக் கருதப்படுகிறது. எனவே இத்தேர்தலில் தமிழகத்தின் முக்கிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. வரும் பிப்ரவரி மாதம் 13ம் தேதி நடைபெறும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கு வேட்பாளர் மனு சமர்பிக்கும் காலக் கெடு நேற்றோடு முடிந்தது.
அ.தி.மு.க., சார்பில் எஸ். வளர்மதி, தி.மு.க., சார்பில் ஆனந்த், பா.ஜ.க., சார்பில் சுப்பிரமணியம், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அண்ணாத்துரை ஆகியோர் உட்பட மொத்தம் 29 பேர் வேட்பாளர் மனு சமர்பித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் 100 சதவீதம் நேமையாக நடக்க தான் உறுதி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பணம் கொடுத்து வாக்காளர்களை, பிடிக்கும் முறையை ஒழுப்பதற்கு, தான் ஒரு சிறப்பு திட்டம் வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதோடு, பொதுமக்களும் தேர்தலில் முறைகேடுகள் நடந்தால், தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்க தனி தொலைபேசி எண் வைத்திருப்பதாகவும், சாட்சிய முள்ள புகார்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று சரியான சாட்சியமற்றவை நிராகரிக்கப்படும் என்றும் அவர் தெர்வித்தார்.
இது குறித்து, செய்தியாளர்களிடம் சந்தீப் சக்சேனா பேசியதாவது:
இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் பணபலம், படை பலத்தை பயன்படுத்துவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் மாவட்ட கலெக்டர் பழனிக்குமார், பொதுப் பார்வையாளர் பல்கார் சிங், செலவுக்கணக்கு பார்வையாளர் ஸ்ரீதர தோரா, காவல் பார்வையாளர் பினோத் குமார், தேர்தலை நடத்தும் அதிகாரி மனோகரன், 32 மண்டல குழுக்கள், 10 பறக்கும் படைகள் ஆகியோர் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
புகார் கொடுக்க டோல் ஃப்ரீ நம்பர்
மேலும், பொதுமக்கள் புகார் தெரிவிக்க 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசியை பயன்படுத்தலாம். தேர்தல் ஆணையத்தின் ஆண்டிராய்டு ஆப், தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றில் புகார்களை தெரிவிக்கலாம். தொலைபேசியில் தகவல் அளிக்கலாம்.
ஆதாரம் இருந்தா தான் புகார் செல்லும்
அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையம் மீது சொல்லும் குற்றச்சாட்டு ஆதாரத்துடன் இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாது. எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் நோட்டாவிற்கு வாக்களிப்பதற்கான பொத்தான், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கடைசியில் இருக்கும்.
பணம் கொடுப்பதும் தப்பு வாங்குவதும் தப்பு
தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரையில் ஓட்டுப்போட பணம் வாங்குவதும், பணம் கொடுப்பதும் தவறு என்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரமும் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் வாக்காளர்களுக்கு பணம் தருவதை தடுக்க புதிய திட்டம் ஒன்றை தேர்தல் ஆணையம் வரும் 31-ந் தேதி அறிவிக்க உள்ளது. இதன் மூலம் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் 100 சதவீதம் நேர்மையான வாக்குப்பதிவு நடக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

No comments:

Post a Comment