கே.வி.ஆனந்த்தின் ‘அனேகன்’, பால்கி இயக்கத்தில் ’ஷமிதாப்’ வெளியாக உள்ள நிலையில், தொடர்ந்து பாலாஜி மோகனின் ‘மாரி’ படத்திலும் நடித்து வருகிறார், தனுஷ்.
தற்போது, தொடக்க காலத்தில் தான் நடித்த ‘புதுப்பேட்டை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளாராம். மாரி படம் முடிந்ததும், செல்வராகவனின் இயக்கத்தில் ’புதுப்பேட்டை-2’ படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.
2006-ல் வெளிவந்த புதுப்பேட்டை படம் தனுஷை புதிய கோணத்தில் ரசிகர்களிடம் வெளிப்படுத்தியது. இதன் பார்ட் 2 கதை விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment