தமிழ், இந்தி, தெலுங்கு என்று அனைத்து மொழி சினிமாவிலும் ஹீரோயின் என்றாலே வெள்ளை நிற தேகத்துடன் தான் இருக்க வேண்டும் என்பது விதி.
அப்படியிருக்க ஒரு வெள்ளை கார பெண்ணே நம் நாட்டு சினிமாவில் நடித்தால் எப்படியிருக்கும். பார்க்க நன்றாக இருக்கும், ஆனால் நிலைத்து நிற்க முடியாது என்று பலர் கூறினாலும் அதையெல்லாம் உடைத்து தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார் எமி ஜாக்ஸன்.
இன்று அவருடைய பிறந்த நாள். மதராசபட்டினம் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான எமி, லண்டனில் பெரிய மாடல். இவரை யதார்த்தமாக பார்த்த இயக்குநர் ஏ.எல்.விஜய் உடனே தன் படத்தில் கமிட் செய்ய, படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து அவர் நடித்த தாண்டவம் படமும் பெரிதாக ஓடவில்லை. ஆனால், சமீபத்தில் வெளிவந்த ’ஐ’ படத்தின் மூலம் மீண்டும் வெற்றி கொடி நாட்டினார். இப்படத்தின் வெற்றி இவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதைத்தவிர அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்திலும் எமி தான் ஹீரோயின் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் மாடலாக இருந்த போது எடுத்த கவர்ச்சி புகைப்படங்களின் வீடியோ ஒன்றை வாட்ஸ் ஆப்பிலும், சமூகத்தளங்களிலும் பரவ விட்டு வருகின்றனர் சில விஷமிகள்.
ஐ படம் வெளிவரும் போது எமியின் ஆடையில்லா புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினர். தற்பொழுது பிறந்த நாள் சமயத்தில் பிறந்த நாளுக்கு கவர்ச்சி விருந்து படைத்த எமி என்று இந்த வீடியோவை சிலர் வெளியிட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment