Friday, 30 January 2015

முத்தரப்பு போட்டிகள்: ஆறுதல் வெற்றி கூட பெறாத இந்திய அணி…


இந்திய அணி ஆறுதல் வெற்றி கூட பெறாமல் முத்தரப்பு போட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளது.
ஆஸியின் பெர்த் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதியது. இதில் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே இந்தியா இறுதிக்குப் போக முடியும் என்ற சூழ்நிலையில் முதலில் பேட் செய்ய ஆரம்பித்தது இந்திய அணி.
வழக்கம் போல ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை விட வில்லை என்றாலும் கூட 20 ஓவர்கள் வரை தாக்கு பிடித்தும் 100 ரன்களை எட்டவில்லை. அதிகபட்சமாக ரஹானே 73 ரன்களும், தவான் 38 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் சொதப்பல் ஆட்டத்தால் இந்தியா 48.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 201 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் மிகவும் தடுமாறியது. அந்த அணி 66 ரன்கள் எடுப்பதற்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில் டெய்லரும், பட்லரும் பொறுப்புடன் ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 125 ரன்கள் குவித்தது.
ஸ்கோர் 191 ஆக உயர்ந்த போத டெய்லர், அவுட் ஆகி வெளியேறினார். இதனைத்தொடர்ந்து பட்லரும் வெளியேறினார். 46.5வது ஓவரில், இங்கிலாந்து அணி வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த முத்தரப்பு போட்டி தொடரில் ஒரு வெற்றியைக் கூட பெற்றாமல் இந்திய அணி வெளியேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment