Wednesday, 28 January 2015

அமெரிக்காவில் வரலாறுகானாத பனிப்புயல்: ஆயிரக்கணக்கில் விமானங்கள் ரத்து!!


அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியிலும் கனடாவின் சில இடங்களிலும், பனிப்புயல் மிகத் தீவிரமடைந்து வருகிறது. இந்த முறை பனிப்புயல் வரலாறு கானாத அளவுக்கு மிகவும அதிகமாக வீசுவதாக அமெரிக்க வாசிகள் தெரிவித்துள்ளனர்.
வரலாறு காணாத பனிப்புயல்
அமெரிக்காவின் நியூஜெர்சி, மைனே, நியூஹம்ப்ஷயர் உள்ளிட்ட மாகாணங்கள் பனிப்புயலால் உரைந்துள்ளன. அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு பனி பொழிந்து வருகிறது.
அப்பகுதியில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் பனிப்புயல் வீச வாய்ப்பிருப்பதாக வாணிலை அறிவிப்பு மையங்கள் தெரிவித்துள்ளன. மேலும், மசாசூசெட்ஸ் மாகாணத்தில், சாலையில் 15 அங்குல அளவுக்கு பனி படர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடலோரப்பகுதிகளான கேப் காட், லாங் தீவு மற்றும் பாஸ்டன் ஆகிய இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து முடக்கம்
தலைநகர் நியூயார்க்கில், நேற்று முதல் வாகனப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அவசர கால வாகனங்கள் தவிற வேறு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
ரயில் சேவைகளும் பனிப் பொழிவால் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் சுரங்க ரெயில் சேவை நிறுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நாடு முழுவதும் 6,500 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பனி காரணமகப் பள்ளிக்கூடங்கள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் இங்கு மக்களின் சகஜ வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கவர்னர்கள் எச்சரிக்கை
கவர்னர்கள் எச்சரிக்கை அமெரிக்கா இதுவரை கண்ட மிக மோசமான 5 பனிப்புயல்களில் இது ஒன்று என மசாசூசெட்ஸ் கவர்னர் தெரிவித்துள்ளார். நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரு கியூமோ, தடை செய்யப்பட்டுள்ள நியூயார்க் மாகாணத்தின் 13 நகரங்களில் கண்டிப்பாக யாரும் பயண தடையை மீறக்கூடாது என எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment