பவர் கிளாஸ் யூஸ் பண்றீங்களா?? சாதாரண பவர் கிளாஸ் பயன்படுத்தி போரடிச்சவங்களுக்கு வெளிச்சத்துக்கு போனா ஃபுல் டார்க் ஆகின்ற மாதிரி ஒரு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார்கள்.
எனினும் இதில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் மீண்டும் கிளியரான, சாதாரண பவர் கிளாஸாக மாற அது எடுத்துக் கொள்ளும் நேரம் தான். இது பற்றிய ஆராய்ச்சியில் ஜார்ஜியாவைச் சேர்ந்த ஜான் ரெனால்ட்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் ஈடுபட்டதில் தற்போது புதிதாக ஒரு தொழில்நுட்பத்தினை கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது, சில நொடிகளிலேயே பவர் கிளாஸாகவும், சன் கிளாஸாகவும் மாறக்கூடிய புதிய கிளாஸைக் கண்டுபிடித்துள்ளனர். இது நீங்கள் விரும்பும் நேரத்தில் பவர் கிளாஸாகவும், சன் கிளாஸாகவும் மாற்றிக் கொள்ள முடியும்.
மேலும் இதில் பழைய மாடல் போல இல்லாமல், நிஜமான சன் கிளாஸைப் போலவே வண்ணப்பூச்சுகள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment