ஜனவரி 28
பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் பிறந்த தினம்…!!
லாலா லஜபதிராய், ஒரு பஞாபிய எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் இந்தியச் சுதந்திர போராட்ட வீரராவார். லாலா என்பது மக்கள் அவருக்கு வழங்கிய புனைப் பெயராகும். 1865ம் ஆண்டு இதே நாளன்று, பஞ்சாபின் மோங்கா மாவட்டத்தில், துடிகே எனும் சிற்றூரில் பிறந்தார் லஜபதிராய்.
தன் தந்தை உருது ஆசிரியராகப் பணியாற்றும் பள்ளியிலேயே படிப்பைத் தொடர்ந்தார் லஜபதி ராய். சிறு வயது முதலே இந்து சமயத்தின் பால் ஈர்ப்பு கொண்டவாரய் இருந்த லாலா லஜபதிராய், பிற்காலத்தில் அரசியல் மூலமாகவும், தனது எழுத்து வாயிலாகவும், இந்து சமயத்தை சீர்திருத்துவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
பள்ளியை அடுத்து லாஹூரில், சட்டம் பயின்று முடித்தார். இந்து சமயத்தின் மீது கொண்ட ஆர்வம் இவரை, இந்து சமாஜத்தில் இணைத்தது. இந்து சமாஜத்தின் மீது, விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, ஆர்ய சமாஜத்திற்கு மாறினார் ராய். லஜபதிராய், தான் இறக்கும் வரை இந்து சமயத் தொண்டாற்றினர் அதே நேரம், இந்தியாவின் விடுதலைக்காகவும் சுதந்திரத் தலைவர்களுடன் இணைந்துப் போராடினார்.
இதன் ஒரு அங்கமாக, இந்திய தேசிய காங்கிரஸில் இவர் சேர்ந்தார். 1907ம் ஆண்டு, காங்கிரஸ் சார்பில், பஞ்சாபில் அரசியல் கிளர்ச்சி ஒன்றை ஏற்படுத்தியதால், ஆங்கிலேய அரசு இவரை வழக்கு ஏதுமின்றி கைது செய்து பர்மா, மண்டாலே சிறையில் தள்ளியது.
லாலா லஜபதிராயின் கைதிற்கு, நாடே எதிர்ப்பு தெரிவித்தது. இந்த எதிர்ப்பை கண்டு அஞ்சிய பிரிட்டிஷ் அரசாங்கம் லஜபதிராயை ஆறு மாதத்திற்குள்ளாகவே விடுவித்தது. 1928ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம், இந்தியாவின் அரசியல் சூழல் குறித்து ஆய்வு செய்ய, சர் ஜான் சைமன் என்பாரது தலைமையில் ஒரு குழுவை அனுப்பியது.
இந்த குழுவில் ஒரு இந்தியர் கூட இல்லாததால், இந்திய அரசியற் தலைவர்கள் இந்தக் குழுவை முற்றிலுமாகப் புறக்கணித்தனர். அரசியல்வாதிகள் மற்றும் சுத்னதிர வீரர்களின் எதிர்ப்பை மீறி இக்குழு இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டது.
1928ம் ஆண்டு அக்டோபர், 30ம் நாள், இந்தக் குழு லாஹூர் வந்தது. ஆங்கிலேயே அரசியற் ஆய்வுக் குழுவின் வருகையை புறக்கணிக்கும் விதமாக பஞ்சாப் சிங்கம் லஜபதிராய், ஒரு சுதந்திரப் படையைத் திரட்டி, அமைதியான முறையில் புறக்கணிப்பு நடைபயணம் மேற்கொண்டார்.
இந்த எதிர்பு நடவடிக்கையை அப்பகுதி பிரிட்டிஷ் போலீஸ் சூபர்னெண்ட், ஜேம்ஸ்.ஏ.ஸ்காட் தடுத்தார். நடைபயணம் நிற்காத பட்சத்தில், தன் காவல் படைக்கு லத்தி அடியுடன் லாலா லஜபதி ராயை நயவஞ்சகமாக கூட்டத்தோடு தாக்குமாறும் உத்தரவிட்டார் என்று கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்டார் லஜபதிராய். கடுமையான காயங்களில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த பொது, அங்கிருந்த மக்களிடம், “பித்தாணிய இந்தியாவில் இறந்த கடைசி இந்தியன் நானாகத் தான் இருக்க வேண்டும்” என்று கூறினார்.
1928ம் ஆண்டு, நவம்பர் 17ம் நாள் படுத்த படுக்கையிலேயே அவர் மரணித்தார். தடியடித் தாக்குதலின் போது ஏற்பட்ட காயங்களாலேயே அவர் இறந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், பிரிட்டிஷ் அரசாங்கம், இதை ஏற்க மறுத்தது. அவர் மாரடைப்பால் இறந்ததாக சான்றிதழும் அளித்தது.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1547 - எட்டாம் ஹென்றியின் இறப்பு. அவனது 9 வயது மகன் ஆறாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னன் ஆனான்.
1679 - சென்னை கோட்டைப் பகுதியில் சிறு நிலநடுக்கம் உணரப்பட்டது.
1846 - அலிவால் என்ற இடத்தில் சீக்கியர்களுடன் இடம்பெற்ற போரில் சர் ஹரி ஸ்மித் தலைமையிலான பிரித்தானியப் படைகள் வெற்றி பெற்றனர்.
1882 - சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.
1935 - ஐஸ்லாந்து கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்கிய முதல் நாடானது.
1986 - சாலஞ்சர் மீள்விண்கலம் புறப்பட்ட 73ஆவது வினாடியில் வானில் வெடித்துச் சிதறியதில் ஏழு விண்வெளிவீரர்கள் கொல்லப்பட்டனர்.
1987 - மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இன்றைய சிறப்பு தினம்
தரவு தனிக் நாள் (Data Privacy Day)
இராணுவ தினம் (ஆர்மீனியா)
No comments:
Post a Comment