நடிகை சன்னி லியோனை பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை. உங்களுக்கே தெரிந்திருக்கும்.. இருந்தாலும் ஒன்னு, ரெண்டு சொல்லிதானே ஆகனும். வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் கொடி கட்டி பறந்தவர் சன்னி லியோன்.
ஒரு வாய்ப்புக்காக பாலிவுட் பக்கம் வந்தவர் தற்போது பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்று அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். சன்னி லியோன் தற்போது ‘லீலா’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் நடந்து வருகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சன்னிலியோன் பக்கிக்ஹாம் அரண்மனைக்கு வந்தபோது அவரை அடையாளம் கண்டுகொண்ட இங்கிலாந்து ரசிகர்கள் அவரை தொடர்ந்து சென்றுள்ளனர். இதனால் சன்னிலியோன் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு மிக வேகமாக ஓடியுள்ளார்.
இருந்தாலும் அந்த ரசிகர்கள் விடாமல் துரத்தி சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த அரண்மனையின் காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினார்களாம்.
சன்னி லியோன் பாலிவுட் நடிகையாவதற்கு முன்பே பல ஆபாச படங்களில் நடித்துள்ளதால் உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர் என்றும், அவ்வாறான ரசிகர் ஒருவர்தான் பக்கிங்ஹாம் அரண்மனையில் சன்னிலியோனிடம் பேசுவதற்காக முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பின்னர் சன்னிலியோனுக்கு படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
No comments:
Post a Comment