Tuesday, 27 January 2015

இனி தமிழிலும் கேட்கலாம் கிரிக்கெட் Commentary..!


கிரிக்கெட் போட்டியை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கிரிக்கெடுக்கு ரசிகர்கள் என்பதை விட அடிமைகள் என்றுதான் கூற வேண்டும்.
இப்போதெல்லாம், நடக்க ஆரம்பித்ததும் கிரிக்கெட் பேட்டை தூக்கிக் கொண்டு கிளம்புகின்றனர் நம் பிஞ்சுகள்… அந்தளவிற்கு கிரிக்கெட் மக்களை ஆட்டிப்படைக்கின்றது. அவர்களும் காலத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிதான் வருகின்றனர். முன்பு டெஸ்ட் மற்றும் 50 ஒவர்கள் கொண்ட ஒருநாள் தொடர்கள் மட்டுமே விளையாடி வந்த அவர்கள், இக்கால வேகத்திற்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் முடியும் 20 ஓவர்கள் கொண்ட போட்டிகளையும் நடத்த ஆரம்பித்து விட்டனர்.
தற்போது புது முயற்சியாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே கிரிக்கெட் கமெண்ட்ரிகளை கேட்டுவந்த நமக்கு தமிழிலும் அறிமுகப்படுத்த இருக்கின்றது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்.
சமீபத்தில் வெளியான தகவலில், அந்நிறுவனம், தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம், பெங்காளி மற்றும் ஆங்கிலத்தில் ஒளிபரப்ப போவதாக தெரிகிறது. அதாவது, டிடிஎச் ஏற்கனவே குறிப்பிட்ட சில சேனல்களை வேறு சில மொழிகளில் பார்க்கும் ஆப்ஷனைக் கொண்டுள்ளது. அதில் விரைவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இணையும் என எதிர்பார்க்கலாம்.
உலகக்கோப்பை தொடரை இம்முறையில் ஒளிபரப்ப முயற்சிகள் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment