Tuesday, 27 January 2015

ஃபேஸ்புக்கில் தயாநிதியை வறுத்தெடுக்கும் தி.மு.க.வினர்…!!


முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தன் தமிபியின் சன் தொலைகாட்சிக்கு, பி.எஸ்.என்.எல்., தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கு படு சூடாகி வருகிறது.
இந்த வழக்கு தொடர்பில் சமீபத்தில் தான், தயாநிதியின், தனி செயலாளரையும், சன் டி.வி. ஊழியர்களையும் சி.பி.ஐ., கைது செய்தது. இதற்கு ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், தி.மு.க.,வுக்கு ஆதரவாகப் பேசி வந்த சிலரும், இந்த வழக்கிற்கு எதிராகவும், இந்த வழக்கில் ஸ்டாலின் தயாநிதிக்கு ஆதரவு தருவது குறித்தும் விமர்சித்து வருகின்றனர்.
தயாநிதியின் அண்டர்கிரவுன்ட் திருட்டு
பி.எஸ்.என்.எல்., தொலைபேசியின் அதிவேக 323 இணைப்புகளை, தன் சகோதரரின் சன் டி.வி.,க்கு முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் தயாநிதி.
தான் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த போது, தன் வீட்டில் இருந்து, 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு அண்டர் கிரவுண்டில் ஃபைபர் கேபிள் அமைத்து ஒரே தொலைபேசி இணைப்பில் 323 இணைப்புகளை, திருடி சன் டிவிக்கு அனுப்பியுள்ளார்.
இந்த விஷயத்தை முன்னாள் சன் டிவி சி இ ஓ சக்சேனாவே, சி.பி.ஐ.,யில் தெரிவித்துள்ளார். இந்த வாக்கு மூலத்தை அடுத்து தான், சன் டி.வி., ஊழியர்கள் தயாநிதியின் செகரட்டரி ஆகியோரை சி.பி.ஐ., கைது செய்துள்ளது.
இந்த விவகாரத்தில், சக்சேனா வெளிப்படையாகவே தான் சி.பி.ஐ.,யிடம் கூறியதை ஒப்புக் கொண்டுள்ளார். இதை வைத்துத் தான் தி.மு.க., ஆதரவு வாசகர்களே, ஃபேஸ்புக்கில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
ஸ்டாலின் ஆதரவாளரின் குமுறல்!!
ஃபேஸ்புக்கில், ஸ்டாலின் ஆதரவாக போஸ்டுகள் போடும், ‘அபி அப்பா என்கிற தொல்காப்பியன்' தயாநிதியின் பி.எஸ்.என்.எல்., பிரச்சனை குறித்தும், ஸ்டாலின் அதற்கு ஆதரவு அளித்தது குறித்து விமர்சித்துள்ளார்.
அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள தகவல் பின்வருமாறு:
"தன் மீது ஒரு குற்றச்சாட்டு பூதாகரம் ஆன போது பகிரங்கமாக பேட்டி கொடுத்தது பிடித்து இருந்தது. அவர் மீது சரியோ அல்லது தவறோ அதை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும். ஆனால் மக்கள் மன்றத்தில் ஒரு இடைத்தேர்தல் நடக்கும் சமயம் இவரது வாக்குமூலமாக பகிரங்கமாக பேட்டி கொடுத்தது வரை சந்தோஷம்.
அண்ணன் ஆ.ராசா அவர்களுக்கு அந்த தைரியம் எப்போதும் இருந்தது. புதியதலைமுறை, தந்தி தொலைக்காட்சி மற்றும் வடநாட்டு சேனல்களுக்கு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடிய தெம்பும் திராணியும் அண்ணன் ஆ. ராசா அவர்களுக்கு இருந்தது. இதோ தயாநிதி மாறனும் ஊடகத்திடம் பேசிவிட்டார்.
இந்த தைரியம் ஏன் கனிமொழிக்கு இல்லை. இதே அண்ணன் ஆ.ராசா அவர்கள் தலைவர் கலைஞர் வீட்டில் இல்லை. தயாநிதி மாறன் தலைவர் வீட்டில் இல்லை. ஆனாலும் அவர்கள் சிலுவையைக்கூட தலைவர் கலைஞர் தான் சுமக்க நேரிடுகின்றது. ஆனால் கனிமொழி அவர்கள் 24 மணி நேரமும் தலைவர் கலைஞர் வீட்டிலேயே இருக்கும் நபர்.
அவர் இப்படி ஊடகங்களுக்கு பயந்து போய் ஓடிக்கொண்டு இருப்பது மேலும் மேலும் மக்கள் மத்தியில் சந்தேகத்தைத்தான் அதிகரிக்கும். தலைவர் கலைஞர் தான் அந்த சிலுவையையும் சுமக்க வேண்டும். திமுக தீர்மானங்கள் இன்னும் ஒரு விஷயம்....
திமுக தன் சமீபத்திய பொதுக்குழுவில் மூன்றே மூன்று தீர்மானங்கள் மட்டுமே போட்டது இன்னும் பல விஷயங்கள் தீர்மானமாக போட்டு இருக்க வேண்டும் என நண்பர்கள் சிலர் குறைபட்டனர். நானும் கூடத்தான். ஆனால் பாருங்கள்.... அதில் இரண்டு தீர்மானங்கள் எத்தனை பவர்ஃபுல் என்று.
பிஜேபி கால் ஊன்றக்கூடாது என்று தலைவர் போட்ட தீர்மானம் எந்த அளவு அவர்களுக்கு கிலியை ஏற்படுத்தி இருப்பின் அவர்கள் இந்த சுறுக்கு வலையை இழுப்பார்கள்??? அதே போல அதிமுகவின் ஊழல்கள் பட்டியல் கவர்னரிடம் கொடுக்கப்படும் என ஒரு தீர்மானம்....
15.04.1995 ஆம் ஆண்டு 596 பக்க ஊழல் பட்டியல் ஆளுனர் சென்னா ரெட்டியிடம் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் திமுகவினர் ஊர்வலமாக சென்று கொடுத்ததன் விளைவு தான் இதோ இப்போதைய ஜெயாவின் வீட்டுச்சிறைக்கு காரணம். ஜெ - ஜெ சந்திப்பு அது போல இன்னும் ஒரு முறை இப்போது கொடுத்தால் என்ன ஆகும்???
அந்த ஜெயாவின் பயம் தான் ஜெ-ஜெ சந்திப்பின் மூலம் (ஜெயா - ஜெட்லி) இந்த சுறுக்கு வலை மீண்டும் இழுக்கப்பட்டுள்ளதோ என்கிற சந்தேகமும் எனக்கு மட்டுமல்ல அரசியலை கவனிக்கும் சாதாரண ஆளுக்கும் இருக்கின்றது. ஆக பொதுக்குழு தீர்மானங்கள் தன் வேலையை செய்ய ஆரம்பித்து விட்டன என்றே கருதுகிறேன்.
நெஞ்சை விட்டு அகலவில்லை திமுகவைச் சேர்ந்த ராஜாகுப்பம் முருகானந்தம் என்பவர் தனது வலைதள பக்கத்தில் திரு .தயாநிதி மாறன் தொலைபேசி விவகாரத்தில் திமுகவின் நிலை என்ன என்று பலர் கேட்கிறார்கள் !
என்னைப் பொறுத்தவரை இன்னும் திரு.கலாநிதி,திரு. தயாநிதி மாறனின் முந்தைய செயல்கள் என் நெஞ்சை விட்டு அகலவில்லை, விஜயகாந்தின் மாநாட்டை நேரடி ஒளிபரப்பு செய்தது,ஜெயலலிதாவின் பொது கூட்டத்தை நேரடி ஒலிபரப்பு செய்தது.
இதை கூட மறந்து விடலாம் நடுநிலை என்றபோர்வையில் நம் உயிருக்கு உயிரான தலைவரையும் ,நம் தளபதியையும் இன்றுவரை அந்த சன் செய்திகளில் பெயர் சொல்லி அழைப்பதை என்னால் ஏற்று கொள்ளமுடியவில்லை.
மாறன் சகோதரர்களுக்கு ஆதரவு திரு. மாறன் சகோதரர்கள் 2006 ஆம் ஆண்டு தேர்தலில் சன் டி.வியின் பிரச்சார பங்கு என்ன 2011 மற்றும் 2014 தேர்தலில் சன் டி.வியின் பங்கு என்ன என்று எண்ணி பார்க்கவேண்டும், இப்படி பட்ட செயல்ல்களை இவர்கள் திருத்தி கொண்டால் ஒட்டுமொத திமுகவின் தொண்டனும் மாறன் சகோதரர்களை ஆதரிப்பார்கள்.
திமுகவின் எந்த பிரச்சனையை பற்றியும் கவலைபடாத இவர்கள் இன்று இவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றுடன் திமுகவையும் செர்த்துகொள்கிறார்கள், எது எப்படியே தலைவர் தளபதி முடிவே நம் முடிவு !
மாறனின் முறைகேடு வழக்கு - பாஜகவுக்கு கொண்டாட்டம்
இதே போல், கொக்கரக்கோ சௌமியன் என்ற ஃபேஸ்புக் கலைஞர் தன் வலைப்பக்கத்தில் இதே பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தித் தொகுப்பு பின்வருமாறு:
”இன்றைக்கு தமிழகத்தில் இருக்கின்ற நடுநிலை பார்வையாளர்கள் / வாசகர்களைக் கொண்டிருக்கும் முன்னனியில் இருக்கும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் அனைத்தும்.....
1. திமுகவுக்கு மிக மிக எதிராகத்தான் செய்திகளை வெளியிடுகின்றன.
2. அதிமுக மற்றும் பாஜகவுக்கு ஆதரவாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்திகளை பரப்புரை செய்து வருகின்றன.
அதே சமயம்..... தமிழகத்தில் பெரும்பான்மையான பொது மக்களால் பார்க்கப்படுகின்ற... மற்றும் கணிசமான நடுநிலையாளர்களால் வாசிக்கப்படுகின்ற காட்சி மற்றும் அச்சு ஊடகங்களாக இருப்பது..... சன் டீவியும்..... தினகரன் / குங்குமம் போன்றவை மட்டுமே...!!!
இவற்றில்....
1. திமுகவுக்கு எதிரான செய்திகள் வருவது இல்லை.
2. அதிமுக மற்றும் ஜெயலலிதாவின் ஊழல்கள் அப்பட்டமாக தோலுரித்துக்காட்டப்படுகின்றன.
இதுவும் இப்பொழுது முடக்கப்படும் வேலைகள் ஆரம்பமாகியிருக்கின்றன....தட்ஸ் ஆல்...!!!
திமுக வேட்பாளராக திரு ஆனந்தன் அறிவிப்பு - திருவரங்கம் தேர்தலில் திமுக களம் இறங்கியது.!
அதிமுக வேட்பாளராக திருமதி வளர்மதி அறிவிப்பு - திருவரங்கம் தேர்தலில் அதிமுக களம் இறங்கியது.!
தயாநிதி மாறன் மீது சிபிஐ நடவடிக்கை - திருவரங்கம் தேர்தலில் பாஜக களம் இறங்கியது.!”
இவ்வாறு, மாறனின் சி.பி.ஐ., நடவடிக்கையை வைத்து பாஜக ஆதாயம் தேடிக் கொள்வதை குறிப்பிட்டுள்ளார் கொக்கரக்கோ சௌமியன். இப்படி, தி.மு.க.,வைச் சேர்ந்த பலரும், மாறி மாறி தயாநிதி மாறனின், பி.எஸ்.என்.எல்., முறைகேடை விமர்சித்து தள்ளுகின்றனர்.

No comments:

Post a Comment