Tuesday, 27 January 2015

அந்த மாறியெல்லாம் நடிக்க மாட்டேன்: ஹன்சிகா


தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா..
தற்போது சிம்புடன் வாலு, வேட்டை மன்னன், ஜெயப்பிரதா மகனுடன் உயிரே உயிரே, ஜெயம் ரவியுன் ரோமியோ ஜூலியட், விஜய்யுடன் புலி, உதயநிதியுடன் இதயம் முரளி என்றுஅரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் ‘வாலு’, ‘உயிரே உயிரே’, ‘ரோமியோ ஜூலியட்’பட வேலைகள் முடிவடைந்து ஒன்றன்பின் ஒன்றாக ரிலீசாக இருக்கின்றன.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த ஹன்சிகா இனிமேல் இயக்குநர்கள் சொன்னாலும் முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். தற்போதைய தமிழ் சினிமா நடிகைகள் போட்டியை சமாளிக்க முத்த காட்சியிலும், கவர்ச்சியாக நடிக்கவும் இறங்கி வருகிறார்கள்.
அதுவும் புதுமுக கதாநாயகிகளிடம் முத்த காட்சியில் நடிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடனேயே புதுப்படங்களில் இயக்குநர்கள் ஒப்பந்தம் செய்கின்றனர்.
மேலும் தணிக்கை குழுவினரும் இது போன்ற காட்சிகளுக்கு கத்தரி போடுவது இல்லை என்பதால் முன்னணி கதாநாயகிகளையும் முத்த காட்சிகளில் நடிக்குமாறு இயக்குநர்கள் நிர்ப்பந்திக்க தொடங்கியுள்ளனர். பல நடிகைகள் இதை ஏற்றுக் கொண்டு நடித்தும் வருகிறார்கள். ஆனால் ஹன்சிகா இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
இதுகுறித்து அவர் கூறும்போது, முத்த காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன். என் படங்களை கணவன், மனைவி, குழந்தைகள் என குடும்பத்தோடு படங்களை பார்க்க வருவதால் இந்த காட்சிகளை தவிர்க்கிறேன் என்கிறார்.

No comments:

Post a Comment