திருப்பதி திருமலையில், ரத சப்தமி தேர் திருவிழா நடந்தது. இந்த விழாவின் கடைசி நாளான நேற்று மட்டும் சுமார் 1 லட்சம் பக்தர்கள் திருமலையில் ஏழுமலையானை தரிசிக்கச் சென்றுள்ளனர்.
இதனால், 1 மணி நேர பக்தர்களும் கூடுதலாக காத்திருந்து தான் ஏழுமலையானை தரிசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், ஆன்லைனில் புக் செய்து திருமலையானை தரிசிக்கும் ரூ. 300 டிக்கெட்டுகளை அதிகரிக்க முடிவு செய்தது, கோயில் நிர்வாகம்.
தற்போது 18 ஆயிரம் ஆன்லைன் டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. தேர்திருவிழாவை முன்னிட்டு நேற்று இந்த 18 ஆயிரம் டிக்கெட்டுகளும் தீர்ந்து விட்டனவாம். எனவே இந்த ரூ. 300 டிக்கெட்டின் எண்ணிக்கையை 2 ஆயிரம் அதிகரித்து 20 ஆயிரம் டிக்கெட்டுகளாக உயர்த்த இருப்பதாக, திருப்பதி ஏழுமலையான் கோயில் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ நிருபர்களிடம் நேற்று கூறினார்.
இன்னும் மூன்று நாட்களுக்கு இந்த கூடுதல் ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனைக்கு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். நேற்றோடு தேர்திருவிழா முடிந்து விட்டதால், இன்று திருப்பதியில் கூட்டம் குறையத் தொடங்கியுள்ளது. எனவே இன்று முதல், ஆன்லைனில் ரூ.300க்கு புக் செய்யும் பக்தர்கள், 1 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசிக்க முடிகிறதாம்.
கால் நடையாக வரும் பக்தர்கள் 2 மணி நேரத்திலேயே திருமாலை தரிசித்து வருகின்றனர். மேலும், இலவச வரிலையில் செல்லும் பக்தர்கள் வழக்கம் போல் 6 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்கின்றனர். எளிதாக திருமலையானைத் தரிசிக்க முடிகிறது என்பதால், தற்போது மீண்டும் திருப்பதிக்கு பக்தர்கள் படைஎடுத்து வருகின்றனராம்.
No comments:
Post a Comment