Tuesday, 27 January 2015

ஷாருக் கான் ஸ்டைலில் இந்தியர்களை கவர்ந்த ஒபாமா…!!


இந்தியாவின் 66வது குடியரசு தினத்திற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த ஒபாமா, மூன்று நாட்கள் கழித்து இன்று இந்தியாவில் இருந்து துபாய்க்கு பறக்கிறார். துபாய் செல்வதற்கு முன் இன்று புது தில்லி, சிரி கோட்டை ஆடிடோரியத்தில் ஒபாமா இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்த உரையில், தவறாமல் அவ்வப்போது இந்தி பேசி, அங்குக் கூடியிருந்த பார்வையாளர்களின் கைத்தட்டல்களைப் பெற்றார் ஒபாமா.
உரையை ஆரம்பிக்கும் போது எந்த ஒரு தலைவர் போல்வும் "நமஸ்தே" என்றே ஆரம்பித்தார். பின், அமெரிக்க மக்களின் சார்பில், நட்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிற்கு எங்களை மீண்டும் அழைத்தற்கு மிக்க நன்றி!! என்று கூறிவிட்டு இறுதியில் “பகுத் தன்யவாத்!!” என்று இந்தியில் நன்றி கூறினார்.
அதோடு, இந்தியாவின் தலை சிறந்த நடிகரான ஷாருக் கானின், தில் வாலே துல்ஹனியா லேஜாயேங்கே படத்தின், வசனத்தையும் ஹிந்தியிலேயே எடுத்து விட்டுள்ளார் ஒபாமா. பேச்சுக்கிடையில், ”செனோரிடா… படே படே தேஷோ மே….” என்ற வசனத்தை ஒபாமா கூறியதும், அரங்கமே கைத்தட்டல்களாலும், விசில்களாலும், அதிர்ந்தது.
இதைத் தொடர்ந்து ஒபாமா தன் முந்தைய பயணத்தை நினைவு கூர்ந்தார். கடந்த 2010ம் ஆண்டு, ஒபாமாவும், அவரது மனைவியும், இந்தியாவிற்கு வந்து, சிறு குழந்தைகளுடன் டான்ஸ் ஆடியதை குறிப்பிட்டார் ஒபாமா.
இறுதியாக, இந்தியார் ஒவ்வொருவரும், பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான், விளையாட்டு வீரர் மில்கா சிங், பாக்ஸிங் புகழ் மேரி கோம், நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி போன்றோரின் வெற்றியை நினைவு கூற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்தியாவில், மதம், பெண்கள் மேம்பாடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசிய ஒபாமா இறுதியாகா “ஜெய் ஹிந்த்” என்றுக் கூறி தன் உரையை முடித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment