கோவையில் நடபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட கவிப்பேரரசு வைரமுத்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
மேலும் தலைமுடி பாதிப்பது குறித்து வேடிக்கையாக பேசினார்.
அவர் பேசியதாவது,
“தலை முடி நம் பரம்பரையோடு சம்பந்தப்பட்டது. ஒரு தலைமுடியை வைத்து நம் சரித்திரத்தையே சொல்லமுடியும். அப்படிப்பட்ட தலைமுடிக்கு நாம் செய்யும் துரோகம் என்னவென்று தெரியுமா? குளித்துவிட்டு ஈரத்தலையோடு தலைவாரிக்கொள்வது. அதன் மூலம் வேர்கள் பாதிக்கப்படுகின்றன. நம் தலையில் இருந்து முடி உதிரத் தொடங்குகிறதா? நம் உடலில் எதோ நோய் இருக்கிறது என்று அர்த்தம்.
தலையை மின் உலர்த்தியைக் கொண்டு உலர்த்தாதீர்கள் அது முடிக்கு கேடு. இயற்கையாக வெயிலில் வைத்து உலர்த்துங்கள். இயற்கையானதையே பயன்படுத்துங்கள். நான் தினமும் நான்கு கருவேப்பிலை இலைகளை கழுவி மென்றுவிட்டுத்தான் வெளியில் கிளம்புகிறேன். முருங்கைக்கீரை, துளசி இலை சாப்பிடுங்கள்.
இயற்கை முறைக்கு மாறுங்கள். தலைமுடி சரும நோய்களுக்கு மற்றொரு காரணம் குடி. அது எல்லா வகையான கெடுதல்களையும் கொண்டு வருகிறது. இளைஞர்களை சீரழிக்கிறது. வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டுமானால் குடிப்பதை விட்டொழியுங்கள்.” என்று கூறினார் கவிப்பேரரசு.
No comments:
Post a Comment