சூரி… ’கமெடில பின்றாப்ல தம்பி.’ என்று அனைவரையும் கூற வைத்துவிட்டார் என்றே கூறலாம். ஆரம்பத்தில் ‘பரோட்டா’ சூரி என அடையாளம் காணப்பட்ட இவர், தனது திறமையால் முன்னேறியுள்ளார். தற்போது எக்கச்சக்க படத்தில் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயனுடன் இவர் ஏற்கனவே, மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், கேடி பில்லா போன்ற படங்களில் கமெடியில் கலக்கியிருப்பார். இதைத் தொடர்ந்து ரஜினிமுருகன் படத்தில் படத்தில் இருவரும் நடித்து வருகின்றனர்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மட்டும் ஜோடி இல்லையாம், சூரிக்கும் தானாம். ஆண்ட்ரியா என்ற வெளிநாட்டுப் பெண் தான் சூரிக்கு ஜோடியாக இயக்குனர் செலக்ட் செய்துள்ளாராம்.
No comments:
Post a Comment