Saturday, 28 March 2015

பறந்தது போன்.. ஓ மை காட் என்று பதறிய இயக்குநர்..!


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த திரைத்துறையில் எந்த ஒரு நல்ல விஷயங்கள் நடந்தாலும், தேடிப் போய் பாராட்டும் பழக்கம் உடையவர். அதேபோல் நல்ல படங்களையும் தவறாமல் பார்த்து, அதன் படைப்பாளிகளுக்கு உற்சாகம் தருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
சமீபத்தில் கூட ஜிகர்தண்டா, மெட்ராஸ் போன்ற படங்களை வெகுவாக பாராட்டி இருந்தார். அதை தொடர்ந்து தற்போது தேசிய விருது விழாவில் சிறந்த தமிழ்ப் படமாக தேர்வு செய்யப்பட்ட குற்றம் கடிதல் படத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சமீபத்திய தேசிய விருது அறிவிப்பில், குற்றம் கடிதல் படம் சிறந்த தமிழ்ப் படமாக தேர்வு செய்யப்பட்டிருந்தது.
இதை அறிந்த ரஜினிகாந்த், உடனடியாக அந்தப் பட இயக்குநர் பிரம்மனுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து இயக்குநர் பிரம்மன் தனது பேஸ்புக் பக்கத்தில், "ஓ மை காட்.. சூப்பர் ஸ்டார் ரஜினி சார் எனக்கு தொலைபேசியில் வாழ்த்துக் கூறினார். தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் படத்தை விரைவில் அவர் பார்க்கவிருக்கிறார்," என்று குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் தயாரிப்பாளர்கள் ஜே சதீஷ்குமார் மற்றும் கிறிஸ்டிக்கும் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜே சதீஷ்குமார் கூறுகையில், "இந்திய திரையுலகின் தலைசிறந்த கலைஞர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் திறமைசாலிகளை கண்டறிந்து பாராட்டுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அதனால்தான் அவர் என்றும் சூப்பர் ஸ்டார்," என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment