சிங்கப்பூரின் முதலாவது பிரதமர் லீ குவான் யூ காலமானதையடுத்து அந்நாட்டு மக்கள் பல்வேறு வகைகளில் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் லீ குவான் யூவின் உருவம் கொண்ட பொம்மைகள் ஏராளமாக விற்பனையாகி வருகின்றன.
சிங்கப்பூர் கலைஞரான கிறிஸ்டோபர் பெரைரா என்பவர் 2009 ஆண்டிலிருந்து லீ குவான் யூ பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். லீ குவான் யூ கடந்த திங்கட்கிழமை தனது 91 வது வயதில் மறைந்ததையடுத்து மேற்படி பொம்மை விற்பனை திடீரென அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சிங்கப்பூரிலுள்ள உணவு விடுதியொன்று லீ குவான் யூ அஞ்சலி செலுத்துவதாகக் கூறி சிறப்பு ரொட்டிகளை தயாரித்து விற்பனை செய்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 700 கும் அதிகமானோர் இது தொடர்பாக புகார் செய்த நிலையில் மேற்படி உணவு விடுதி நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.
No comments:
Post a Comment