அனேகன் படத்தில் இடம் பெற்ற ‘டங்காமாரி ஊதாரி’ பாடல் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆடிப் பாட வைத்தவர் பாடலாசிரியர் ரோகேஷ். இப்பாடல் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது ரோமியோ ஜூலியட் படத்தில் அவர் எழுதிய டண்டனக்கா பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த இரண்டு பாடல்களும் தான் தற்போது உள்ள இளைஞர்களின் நாடித்துடிப்பாக உள்ளது. இந்த இரண்டு பாடல்களையும் எழுதிய ரோகேஷ் வடசென்னையை சேர்ந்தவர். இவருக்கு அஜித்தை ரொம்ப பிடிக்குமாம்.
இது குறித்து அவர் கூறுகையில், சின்ன வயசுல இருந்தே நான் அஜித் ஃபேன். செல்ஃபோன்ல நெட்டுக்கார்டு போட்டா முதல்ல பார்க்குறது தல பத்தின நியூஸூதான். தல பட ரிலீஸ் என்றாலே நாங்க ஒரு மாதிரி ஆகியிடுவோம். கட் அவுட் வைக்கிறது, பாலாபிஷேகம் பண்றதுனு கலக்கிடுவோம்.
சமீபத்தில் குட்டிதல பிறந்த அன்னைக்கு அனைவரும் இரத்தம் கொடுத்தோம். எனக்கு அஜித்தை நேர்ல பாத்தா அவர்கூட ஒரு ஃபோட்டோ புடிக்கணும்னு ரொம்ப ஆசை. என்று கூறினார் ரோகேஷ்.
No comments:
Post a Comment