பெங்களூருவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., டி.கே.ரவியின் வழக்கு கர்நாடக அரசியல்வாதிகளிடையே மோதலை எற்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.கே.ரவி, கடந்த மார்ச் 13ம் தேதி, தன் வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தற்கொலை அல்ல என்றும், இவரது இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகாரளித்தனர், போராட்டம் செய்தனர். மேலும், வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
நேர்மையான அதிகாரி ஒருவர் இறந்தது தொடர்பில் போராட்டங்கள் நடந்தது, நாடுமுழுவதும் பெரும் பரபப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், இந்த வழக்கு சி.பி.ஐ.,வசம் மாற்றப்படவில்லை. கர்நாடக போலீஸே இந்த வழக்கை நடத்தி வந்தது. போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், ஐ.ஏ.எஸ்., ரவிக்கும் அவருடன் பயின்றவரும், திருமணமானவருமான டி.சி.பி., டாக்ரட் ரோஹினி காட்டோச் என்பவருக்கும் தொடர்பு உள்ளது என்று கூறப்பட்டது.
இது குறித்து கர்நாடக முதல்வர் முன்னாள் முதல்வரான குமாரசாமி, ரவி பெண் அத்காரி ரோகினிக்கு 44 போன் கால்களை செய்ததாக தெரிவித்தார். இதனை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் இந்த வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில், பெண் அதிகாரி ரோகினியின் கணவர் சுதீர் ரெட்டி என்பவர் கர்நாடக அரசும், போலீஸும் சேர்ந்து வழக்கில் தன் மனைவியை வைத்து விளையாடுவதாக குறிப்பிட்டு, உயர் நீதிமன்றத்தில் வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய தடை பெற்றர்.
இந்நிலையில், பெண் அதிகாரி ரோகினியின் கணவர் சுதீர் ரெட்டிக்கு ஆதரவாக முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி குரல் கொடுத்துள்ளார். அம்மாநில முன்னாள் முதல்வரான குமாரசாமி, இவ்வழக்கில் போலீஸார் பெண் அதிகாரியை வைத்து விளையாடி இருப்பதாகவும், மேலும் ரவி 44 போன் கால்களை செய்ததாக கர்நாடக முதல்வர் சித்தராமையா நிரூபித்தால், தான் அரசியலை விட்டே விலகத் தயார் எனவும் சவால் விட்டுள்ளார்.
இதனால் வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் தற்கொலை வழக்காக இருந்த இது, பெண் அதிகாரியின் வாக்குமூலத்தை அடுத்து பாலியல் தொந்துரவு வழக்காக மாறியது. இதைத் தொடர்ந்து தற்போது அரசியல்வாதிகளுக்கிடையிலான மோதலாக மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment