அ.தி.மு.க., பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பதவியை இழந்தார்.
இந்நிலையில் தான் அவருக்கு அ.தி.மு.க.,வினரும் ஜெயா டி.வியும் சேர்ந்து ‘மக்களின் முதல்வர்’ என்ற புனைப் பெயரை ஜெயலலிதாவுக்கு வழங்கினர். இந்த புனைப் பெயருக்கு தி.மு.க., விஜயகாந்தின் தே.மு.தி.க., உள்ளிட்ட பல எதிர்கட்சிகள் மத்தியின் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா மக்கள் முதல்வர் என்றால் ஓ. பன்னீர் செல்வம் தமிழக மக்களின் முதல்வர் இல்லையா என்று கேள்வி எழுந்தது. ஊடகங்களிலும் ”மக்கள் முதல்வர்” குறித்து சர்ச்சையான விமர்சனங்கள் வெளிவந்தன.
இந்நிலையில், இந்த மக்கள் முதல்வருக்கு போட்டியாக மனிதர்களின் முதல்வர் என்ற புனைப் பெயருடன் களமிறங்கி இருக்கிறார் மு.க.ஸ்டாலின். ஏற்கனவே ஜெ., மக்கள் முதல்வர் என்ற பெயரைப் பெற்று ஏண்டா இந்த பட்டத்தை வைத்தார்கள் என்ற அளவுக்கு கதறிக் கொண்டிருக்கும் வேளையில், மு.க. ஸ்டாலினுக்கு ‘மனிதர்களின் தலைவர்’ என்ற சர்ச்சையான புனைப் பெயரை கொடுத்துள்ளனர் கோவை தி.மு.க.,வினர்.
மக்கள் முதல்வரை அந்த கிழி கிழிச்சாங்க… இவரை என்னென்ன சொல்லப் போராங்களோ…
No comments:
Post a Comment