Thursday, 26 March 2015

பிரித்தானியா, அமெரிக்காவை இணைக்கும் 12,400 மைல் நீளமான 'சூப்பர்' நெடுஞ்சாலை..!


பிரித்தானியாவிலிருந்து அமெரிக்காவுக்கு 12,400 மைல் நீளமான உலகின் அதி நீளமான சூப்பர் நெடுஞ்சாலை ஒன்றை அமைப்பதற்கான ஆலோசனையை ரஷ்ய விஞ்ஞான அக்கடமியைச் சேர்ந்த விஞ்ஞானியான விளாடிமிர் போர்டோ வால் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.


இந்த நெடுஞ்சாலையானது உலகின் சுற்றளவில் அரைப் பங்கு அளவுடையதாகும். மேற்படி நெடுஞ்சாலை பிரித்தானியாவிலிருந்து ரஷ்யாவின் வழியாக அமெரிக்காவை இணைப்பதாக உள்ளது.
அத்துடன் இந்த நெடுஞ்சாலை ஐரோப்பா மற்றும் ஆசியாவுடனான ஏற்கனவேயுள்ள வீதிகளுடன் இணைப்பைக் கொண்டுள்ளதால் கண்டங்களுக்கிடையிலான பரந்தளவான போக்குவரத்துகளுக்கு வழிவகை செய்வதாக அமையும் என கூறப்படுகிறது. தற்போது உலகின் மிக நீளமான நெடுஞ்சாலையாக ஆஸ்திரேலியாவிலுள்ள 9,000 மைல் நீளமான முதலாம் இலக்க நெடுஞ்சாலை விளங்குகிறது.

No comments:

Post a Comment