Tuesday, 31 March 2015

இதை நீங்க நம்பிதான் ஆகணும்..!


கத்தி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு முருகதாஸ் எந்த படத்தை இயக்குகிறார், யாரை வைத்து இயக்குகிறார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர் பார்த்து வந்தனர். சமீபத்தில் கூட அவர் ரஜினையை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது.
ஆனால் அதற்கு பிறகு இது குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில்தான் சத்தமே இல்லாமல் சோனாக்ஷி நடிக்கும் இந்தி படத்தை தொடங்கியிருக்கிறார் முருகதாஸ். அகிரா என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படம் தமிழில் அருள்நிதி நடிப்பில் வெளிவந்த ‘மௌனகுரு’ படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.
ஆனால் படத்தில் ஒரு சில மாற்றங்களை செய்து முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது 2ஆம் கட்ட படப்பிடிப்பில் நடிகை ராய் லட்சுமி நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
தமிழில் பெரிய மார்க்கெட் இல்லாத ராய் லட்சுமிக்கு எப்படி பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தது என்று ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர் சில முன்னணி நடிகைகள். இது உண்மையா..? பொய்யா..? என்றுகூட யோசித்து வருகிறார்களாம்.
ஒருவேளை இது உண்மை என்றால் ராய் லட்சுமி நடிக்கும் முதல் பாலிவுட் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது தான்.

No comments:

Post a Comment