நடிகை ஸ்ருதிஹாசன் பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனம் தயாரிக்கும் புதியப்படம் ஒன்றில் நடிக்க சமீபத்தில் ஒப்பந்தமாகியிருந்தார். வம்சி இயக்கும் இந்தப் படத்தில் நாகார்ஜூன் மற்றும் கார்த்தி நாயகர்களாக நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், தான் இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக ஸ்ருதிஹாசன் கூறியிருக்கிறார். தன்னிடம் தேதிகள் இல்லை எனவே நடிக்க முடியாது என இமெயிலில் தகவல் அனுப்பிவிட்டாராம் ஸ்ருதி.
உடனே ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் ஸ்ருதி மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குத் தொடர்ந்தது பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனம். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு தொடுத்துள்ள நிறுவன படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை, புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு (ஏப்ரல் 8-ந்தேதி வரை) நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவின்படி, பஞ்சாரா ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் மீது மோசடி வழக்குப் பதிவு செய்தனர்.பின்னர் இந்த வழக்கு ஜூபிளி ஹில்ஸ் போலீஸ் நிலைய அதிகார எல்லைக்கு உட்பட்டது என்பதால் அந்த போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
No comments:
Post a Comment