Sunday, 29 March 2015

ரஜினியையும் ஒரு கை பார்த்துவிடுவோம்.. ஷங்கருடன் லிங்குசாமி சந்திப்பு


தற்போது இருக்கும் தயாரிப்பு நிறுவனங்களில் கோடிக்கணக்கில் லாபத்தை அள்ளும் தயாரிப்பு நிறுவனம் எதுவென்றால் லிங்குசாமியின் திருப்பது பிரதர்ஸ் நிறுவனம் தான்.
ஒரே நேரத்தில் அரை டஜன் படங்களை தயாரித்து வருகிறது. அந்த படங்களை எந்த தடையும் இல்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக ரிலீஸ் செய்யவும் காத்திருக்கிறது. இந்த நேரத்தில் தான் கோலிவுட் சினிமாவை ஆச்சரியத்திற்குள்ளாக்கும் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.
அதாவது ரஜினியின் அடுத்த படம் என்ன? ஷங்கரின் அடுத்த படம் என்ன? இவ்விரண்டு கேள்விகளையும் விடாமல் பிடித்து கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் அதற்கு விடை கிடைத்தால்தானே? நடுவில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் இவ்விருவரையும் வைத்து படம் தயாரிக்க விரும்பியதாகவும் ஆனால் பட்ஜெட் பல கோடிகளை எட்டியதால் அந்த முயற்சியிலிருந்து பின்வாங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில்தான் இயக்குநர் லிங்குசாமி பிரமாண்ட இயக்குநர் ஷங்கரை ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்புக்குதான் பல்வேறு அர்த்தங்களை கற்பித்து ஆவலோடு காத்திருக்கிறது திரையுலகம். தமிழ்சினிமாவின் அடையாளமான கமலையே வைத்து படம் தயாரித்துவிட்டார் லிங்குசாமி.
அதற்கு அடுத்த இலக்கிலிருப்பவர் ரஜினிதானே? அதனால் அதையும் ஒரு கை பார்த்துவிடுவது என்று தீர்மானித்துவிட்டாரோ என்னவோ? இருந்தாலும் இந்த சந்திப்பை இருவரும் ரகசியமாக வைத்திருந்தாலும், எவ்வளவு நாளைக்கு மூடி வைத்திருக்க முடியும்? என்கிறார்கள் இந்த ரகசியத்தை அறிந்தவர்கள்.
கூடிய விரைவில் லிங்குசாமியின் பிரமாண்ட தயாரிப்பில், ரஜினி நடிப்பில், ஷங்கர் ஒரு படத்தை இயக்குவார் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

No comments:

Post a Comment