Tuesday, 31 March 2015

3D அச்சிடல் முறையில் தயாரிக்கப்பட்ட ஆமை ஓடு…!


அமெரிக்காவிலுள்ள ஆமையொன்றின் ஓடு சேதமடைந்ததால் முப்பரிமாண அச்சிடல் முறையில் உருவாக்கப்பட்ட செயற்கை ஓடொன்று பொருத்தப்பட்டுள்ளது. கொலராடோ மாநிலத்தின் விலங்குகள் சரணாலயமொன்றினுள் இந்த ஆமையின் ஓடு மந்த ஊட்டச்சத்து காரணமாக சேதமடைந்திருந்தது.
இதனால், கிருமி தொற்றுகளுக்குள்ளாகி பெரும் பாதிப்படைந்த நிலையில் இந்த ஆமை காணப்பட்டது. தற்செயலாக மல்லாக்காக கவிழ்ந்துவிட்டால் மீண்டும் உரிய நிலைக்கு வருவதற்கும் இந்த ஆமை சிரமப்பட்டது.
இது குறித்து அறிந்த கொலராடோ தொழல்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவரான ரொஜர் ஹென்றி என்பவர், இந்த ஆமைக்கு முப்பரிமாண அச்சிடல் முறையில் செயற்கை ஓடொன்றை தயாரித்துக்கொடுத்துள்ளார்.
இந்த ஆமையின் இயற்கையான ஓட்டுக்கு மேலாக செயற்கை ஓடு பொருத்தப்பட்டுள்ளது. "இந்த ஆமையின் ஓடு சேதமடைந்துள்ளதாகவும் அதற்கு உதவி தேவைப்படுவதாகவும் நான் அறிந்தேன். அதனால் செயற்கை ஆமை ஓடொன்றை தயாரிப்பதற்கு நான் விரும்பினேன்" என ரொஜர் ஹென்றி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment