கேட்ஜெட் பிரியர்களின் முதல் தேர்வு ஐபோன் எனலாம். அழகு, செயல்திறன், மதிப்பு என எல்லாவற்றிலும் முன்னிலையில் இருக்கும் இந்த ஐபோனை தயாரித்த ஆப்பிள் நிறுவனம் சென்ற ஆண்டு உலகிலேயே அதிக அளவு லாபம் ஈட்டிய செல்போன் கம்பெனி என்ற பெயரைத் தட்டிச் சென்றது.
சென்ற செப்டம்பர் மாதம் ஐபோன் 6 மற்றும் 6 Plus என்று 2 ஐபோன்கள் வெளியாகி உலகையே ஒரு கலக்கு கலக்கின. இந்த புதிய ஐபோன் மாடல்கள் வந்து ஓராண்டு கூட ஆகாத நிலையில், ஐபோனின் அடுத்த மாடலுக்கான முன் மதிரிகள் வெளியாகத் துவங்கிவிட்டன.
சர்வதேச அளவில் ஐபோன் பிரியர்கள் சிலர் ஐபோனின் அடுத்த மாடல்கள் இப்படித்தான் இருக்கும் என்ற முன்மாதிரிப் படங்களை வெளியிட்டுள்ளனர். வர இருக்கும் புதிய ஐபோன், தற்போதைய ஐபோன் 6 ஐ விட சிறியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதில், இரண்டு லென்சுகள் சேர்ந்து செய்யப்பட்ட கேமிரா உள்ளதால் டி.எஸ்.எல்.ஆர்., கேமிரா போன்று செயல்படும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. அவற்றை நிரூபிக்கும் மாதிரிப் படம் இது.
புதிய ஐபோனின் இயர் பீஸ் ஸ்பீகர் சற்று மேல் அமைந்துள்ளது. அதோடு இணைந்தே கேமிராவும் வைக்கப்பட்டுள்ளது. இது அடுத்த ஐபோன் மாடலின் மற்றொரு முன்மாதிரி இது.
இதில், ஐபோனின் முன் தொடுதிரை முழுவதும் டிஸ்பிளே அமைந்துள்ளது. இடையில், ஹோம் பட்டனும், இயர் பீஸ் மற்றும் கேமிராக்கள் இடம்பெற்றுள்ளன. ஐபோன் 6 இந்த டிசைனில் முழுத் திரையில் வரும் என்று தான் முதலில் தகவல்கள் வெளிவந்தன.
ஆனால், இதில் பிரச்சனைகள் அதிகம் இருந்ததால், இந்த தொழில்நுட்பம் புறக்கனிக்கப்பட்டது. எனவே, அடுத்த ஐபோனில் இந்த புது தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என்று கருதப்படுகிறது.
ஐபோன் 5c போன்றே இந்த புதிய ஐபோனும், பல வண்ணங்களில் வரலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது. புதிய ஐபோனில், ஆப்பிள் சிம் என்ற புதிய சிம்முடன் வரலாம் என்று தக்வல்கள் வந்துள்ளன.
இந்த புதிய ஐபோனின் ரேம் 1 முதல் 2 GB வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அது மட்டுமல்ல, அடுத்த ஐபோனில் கண்டிப்பாக வையர்லஸ் சார்ஜிங் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கேம் பிரியர்களுக்காக, ஐபோனின் ஹோம் பட்டன் ஜாய்ஸ்டிக் வடிவில் உருவாக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.
No comments:
Post a Comment