தமிழில் ஜெயம் ரவியுடன் ’தாம்தூம்’ படத்தில் நடித்தவர் இந்தி நடிகை கங்கனா ரணாவத். இவர் பாலிவுட்டில் தன் நடிப்பாலும், கவர்ச்சியாலும் புகழ்பெற்ற நடிகையாக விளங்கிவருகிறார்.
இயக்குநர் அனுராக் கஷ்யாய் தயாரித்த ‘குயின்' படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகினர் பலரின் பாராட்டை பெற்றதுடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றிருக்கிறார் கங்கனா ரணாவத்.
தேசிய விருது பெற்றது குறித்து அவர் கூறுகையில்: தேசிய விருது என்பது பிராந்திய படங்களின் நடிப்புக்கான கணக்காகவும் எடுத்துக்கொள்ளப்படுவதால் அதை நான் மதிக்கிறேன். கேங்ஸ்டர் இந்தி படத்தில் நடித்தபிறகு என்னிடம் நடிப்பு திறமை குவிந்திருப்பதாக கூறினார்கள்.
ஆனால் ஒரு கட்டத்தில் நான் மதிப்பு குறைவாக நடத்தப்பட்டிருக்கிறேன். தீண்டத்தகாத பெண்போல் பாவித்ததுடன் அசிங்கமான வார்த்தைகளால் திட்டி இருக்கின்றனர். அதற்கு எனது தரப்பிலிருந்து நான் எந்த எதிர்ப்பும் தெரிவித்ததில்லை. நான் பேசும் பாணி, உடை அணியும் தன்மை போன்றவற்றையும் கேலி செய்வார்கள். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டிருந்தேன்.
நடிகை என்ற வகையில் இப்போதுதான் எனக்கான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. பலரும் என்னை வெறுத்து ஒதுங்கியபோது பிரியங்கா சோப்ரா மட்டும் என்னிடம் நன்கு பழகினார். இப்போதைக்கு எனக்கு இருக்கும் ஒரு தோழி அவர்தான்.இவ்வாறு கங்கனா ரணாவத் கூறினார்.
No comments:
Post a Comment