கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா நடிப்பில் தயாராகி இருக்கும் படம் ’உத்தம வில்லன்’. கமலின் நண்பரான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில் மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். உலகமு முழுவது ஈராஸ் நிறுவனம் வெளியிடும் இப்படம் முதலில் ஏப்ரல் 2 ஆம் தேதி ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. பிறகு ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்து ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாகும் என்று கூறப்பட்டது.
ஆனால், தற்போது சென்சார் பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தில், ஏப்ரல் 10ம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என தெரிகிறது. 'உத்தம வில்லன்' படத்தை அமெரிக்காவில் வெளியிடும் ப்ரைம் மீடியா நிறுவனத்தினர் "உத்தம வில்லன் 10ஆம் தேதி வெளியாகவில்லை. வெளியீட்டு தேதி சென்சார் பணிகள் முடிந்ததும் அறிவிக்கப்படும்" என்று டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.
ஏப்ரல் இறுதியில் படம் வெளியாகலாம் என்கிறார்கள். கமலுக்கு மட்டும் ஏன் இப்படி நடிக்கிறது என்று தெரியவில்லை. அவருடைய படங்கள் ஒன்னு பிரச்சினையில் சிக்கிக்கொள்கிறது. இல்லையென்றால் ரிலீஸாக தாமதமாகிறது.
No comments:
Post a Comment