அமெரிக்காவின் பிரபல பாப்பிசைப் பாடகியான டெய்லர் ஸ்விப்ட், (Taylor Swift) தனது பெயரிலான இரு ஆபாச இணையத்தளங்களை விலைகொடுத்து வாங்கியுள்ளார். 25 வயதான டெய்லர் ஸ்விப்ட், ஏராளமான விருதுகளை வென்றதுடன் உலகின் அதிகம் சம்பாதித்த பாடகிகளில் ஒருவராகவும் விளங்குகிறார்.
இந்நிலையில், அவரின் பெயரில் சிலர் ஆபாச இணையத்தளங்களை பதிவுசெய்திருந்தனர். இவ்விசயம் டெய்லர் ஸ்விப்டுக்கு தெரியவந்ததையடுத்து, பணம் செலுத்தி, மேற்படி இணையத்தளங்களின் உரிமையை தனதாக்கிக் கொள்ள அவர் தீர்மானித்தார்.
இதன் மூலம் தனது பெயர் துஷ்பிரயோகம் செய்யப்படாமல் இருக்கும் என்பதே இத்தீர்மானத்துக்கு காரணம். எதிர்வரும் மே மாதம் முதல் டிசம்பர் வரை உலகளாவிய இசைச் சுற்றுலாவை நடத்தவுள்ள டெய்லர் ஸ்விப்ட், அண்மையில் தனது கால்களை 520 கோடி ரூபாவுக்கு காப்புறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment