இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் ஆலந்தூர் ஏ.ஜெ.எஸ் நிதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற “மாநில அளவிலான மிஸ்டர் தமிழ்நாடு 2015” மாபெரும் ஆணழகன் போட்டியில் தமிழகமெங்கும் இருந்து நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தி.மு.க காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், தலைமையில் நடைபெற்ற இப்போட்டியினை நான்காயிரத்துக்கும் மேற்ப்பட்டோர் கண்டு களித்தனர்.
இப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் மா சுப்பிரமணியன் பரிசுகள் வழங்கினார். முதல் பரிசு பெற்ற சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த குமாருக்கு பரிசாக ‘நானோ’ கார் வழங்கப்பட்டது.
இதில் 75 KG பிரிவில் ராஜதுரை முதல் பரிசு வென்றார்.
No comments:
Post a Comment