Thursday, 26 March 2015

இன்றைய தினம்....!! (மார்ச் 27)


மார்ச் 27
1968
விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் இறந்தார்
ரஷ்யாவின் மாஸ்கோவை சேர்ந்தவர் யூரி ககாரின். இவர் தான் விண்வெளிக்குப் பயணித்த முதல் மனிதராகக் கருதப்படுகிறார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவர் தான் என்றுக் கூறப்படுகிறது.
ஏப்ரல் 12ம் நாள், 1961ம் ஆண்டு, சோவியத் ஒன்றியத்தின் வஸ்டொக் - 1 விண்கலத்தில், பூமியைச் சுற்றி 108 நிமிடங்கள் பயணித்தார். இதனால் உலகப் புகழ் பெற்றார். இவர் தொழிற்துறை பயிலும் போது பகுதி நேரத்தில் விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டு வந்தார்.
விமான இயக்கத்தில் தேறிய இவர், ராணுவ விமானியாக தன் வாழ்கையை ஆரம்பித்தார். 1960ல் சோவியத்தின் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் இணைந்து, கடும் பயிற்ச்சிக்குப் பின் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதில் வெற்றி கண்டார்.
இவர் 1968ம் ஆண்டு இதே நாள், விலாடிமிர் செர்யோஜின் என்பவருடன் வழக்கமான விமான பயிற்ச்சியில் ஈடுபட்டிருந்த போது, விமான விபத்துக்குள்ளாகி மாண்டார். இவர் இறந்த போது இவருக்கு வயது 34 தான்.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1513 - ஜுவான் பொன்ஸ் டி லெயோன், வட அமெரிக்காவை கண்டுபிடித்தார்.
1794 - டென்மார்க் மற்றும் ஸ்வீடன் இடையே நடுநிலை ஏற்பட்டது.
1977 - இரண்டு பயணிகள் விமானங்கள் கனாறி தீவுகளில் மோதிக் கொண்டதில் 583 பயணிகள் பலியாகினர்.
இன்றைய சிறப்பு தினம்
சர்வதேச திரையரங்குகள் தினம்
ஆயுதப்படைகள் தினம் (பர்மா)

No comments:

Post a Comment