உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி அடைந்ததை பற்றி ரசிகர்கள் பெரிதாக பேசுகிறார்களோ இல்லையோ.. ஆனால் அனுஷ்கா சர்மாவையும், விராட் கோலியும் பற்றி பலவிதமாக பேசிவருகின்றனர்.
இன்னும் சொல்லப்போனால் டுவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் இருவரையும் வறுத்தெடுத்து வருகின்றனர் ரசிகர்கள். இந்தியா தோல்விக்கு காரணம் அனுஷ்கா சிட்னி சென்றது தான் காரணம் என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகர் கமல் ரஷித் கான் உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா தோற்றதற்கு காரணம் அனுஷ்கான் தான், எனவே அவர் வீட்டு மீது கல்லெறிந்து நாசமாக்குங்கள் என்று ரசிகர்களைத் தூண்டியுள்ளார். மேலும் கேவலமான கமெண்டுகளையும் அவர் டுவிட்டரில் எழுதியுள்ளார். முன்னணி நட்சத்திரங்கள் அல்லது பிரபலங்களை கிண்டலடித்து பப்ளிசிட்டு தேடும் நபர்தான் இந்த கமல் கான். அண்மையில் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை வம்புக்கு இழுத்தார்.
தற்போது இந்திப் பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா சர்மாவை வம்புக்கிழுத்துள்ளார். அவர் சிட்னி போனதால்தான் விராட் கோலி சரியாக விளையாடவில்லை என்றும், அதனால் அனுஷ்கா வீட்டின் மீது ரசிகர்கள் கல்லெறிய வேண்டும் என்றும் அவர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இனி அனுஷ்கா சர்மா நடிக்கும் படங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இதுவாது பரவாயில்லை. விராட் கோலியை மிக மட்டமாக கிண்டலடித்துள்ளார். "சிட்னி கிரவுண்டில் நன்றாக விளையாடுவார் விராட் கோலி என மக்கள் நம்பினர். ஆனால் இரவெல்லாம் விளையாடிய அவர் பகலில் ஏன் விளையாடப் போகிறார்?" என பகிரங்கமாக கமெண்ட் அடித்து உள்ளார்.
No comments:
Post a Comment