Monday, 30 March 2015

மணமகள் அழகு இல்லாததால் ஆற்றில் குதித்த மணமகன்…!


தான் திருமணம் செய்யவிருந்த மணமகளை முதல் தடவையாக பார்த்தபின், அம்மணமகள் அழகில்லை எனக் கூறி மணமகன் ஆற்றில் குதித்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
காங் ஹு எனும் 33 வயதான இந்த இளைஞருக்கும் 30 வயதான பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர், உறவினர்களால் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஹுபே மாகாணத் தின், ஷியான் நகரில் நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர்தான் மணமகளை முதல் தடவையாக நேரில் பார்த்தாராம் காங் ஹு.
தான் எதிர்பார்த்தைப் போல் மணமகளின் தோற்றம் இருக்கவில்லை என அவர் அதிருப்தி தெரிவித்தார். அதையடுத்து, திருமணத்தை இரத்துச்செய்த, காங் ஹு, மணமகளிடம் மன்னிப்பு கோரிவிட்டு அங்கிருந்து சென்றார்.
சில மணி நேரங்களின் பின்னர் ஆறொன்றிலிருந்து முகம்குப்புறக் கிடந்த நிலையில் காங் ஹு, மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். உணர்வற்ற நிலையில் அவர் காணப்பட்டதாக மீட்பு நடவடிக்கையை புகைப்படம் பிடித்த கான் சூய் என்பவர் தெரிவித்துள்ளார். தற்போது காங் ஹுயின் உடல்நிலை ஸ்திரமாக உள்ளதென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment