உலக சாதனை படைத்த 4 அடி, 4 அங்குல உயரத்தைக் கொண்ட குள்ளமான உடல் கட்டுறுதி வீரரான அன்டன் கிராப்ட், 6 அடி, 3 அங்குல உயரத்தைக் கொண்ட பால் மாற்று சிகிச்சை செய்து கொண்ட பெண்ணின் காதலை வென்றுள்ளார்.
தனது உடல் நிறையை விடவும் நான்கு மடங்கு அதிகமான நிறையைத் தூக்கிய உலகின் ஒரே மனிதராக அமெரிக்க புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த அன்டன் கிராப்ட் (52 வயது) விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. அவர் தன்னை விடவும் ஒரு அடி அதிக உயரத்தைக் கொண்ட சினா பெல்லை (43 வயது) கடந்த 6 மாத காலமாக காதலித்து வருகிறார்.
கடந்த 10 வருட காலத்தில் பளு தூக்கும் தனது சாதனை முயற்சிகளின் போது தான் 5 தடவைகள் இறப்பு வரை சென்று உயிர் திரும்பியதாக அன்டன் கிராப்ட் தெரிவித்துள்ளார். ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய சினா பெல், அன்டன் கிராப்ட் முதன்முதலாக தன்னிடம் காதலைத் தெரிவித்த போது தனக்கு என்ன கூறுவதென்றே புரியவில்லை என்று கூறினார்.
எனினும் பாரம் தூக்குவதில் அவருக்கு இருந்த அதீத திறமைகளால் பின்னர் தான் அவர் பால் கவரப்பட்டதாக அவர் தெரிவித்தார். பளு தூக்குவதால் அன்டன் மிகவும் பாலியல் கவர்ச்சியுடையவராக இருப்பதாக தான் கருதுவதாக சினா பெல் குறிப்பிட்டுள்ளார். சினா பெல்லின் காதல் தனக்குக் கிடைத்துள்ளதையிட்டு தன்னை அதிர்ஷ்டசாலியொருவராக உணர்வதாக அன்டன் கிராப்ட் கூறுகிறார்.
அதேசமயம் அன்டன் கிராப்ட் தனது பளுத் தூக்கும் செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்வாராயின் அவர் மாரடைப்புக்கு உள்ளாகி மரணமடைய நேரிடலாம் என மருத்துவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment