சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் இந்தியர் ஒருவர் பஸ்ஸில் சென்ற போது அந்நாட்டு பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக சிறை தண்டனைப் பெற்றுள்ளார்.
சிங்கப்பூரில், டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வசித்து வருபவர் 32 வயதான சீதாராமன் ரமேஷ். இவர், கடந்த 2014, ஜூலை 25ம் நாள் பஸ்ஸில் பயணம் மேற்கொண்டார்.
அச்சமயம் பஸ்ஸில் ஒரே ஒரு பெண் மட்டுமே இருந்தார். 39 வயதான் அந்தப் பெண் பஸ்ஸின் முன் புறம் அமர்ந்துள்ளார். சீதாராமன் கடைசியில் அமர்ந்திருந்தார்.
பேருந்தில் ஆட்கள் யாரும் இல்லாததைப் பார்த்த சீதாராமன், மெதுவாக பெண்ணை நோக்கி சீட் விட்டு சீட்டாகத் தாவிச் சென்றுள்ளார். இப்படியே மாறிமாறி அமர்ந்து பெண் அமர்ந்திருக்கு இருக்கைக்கு பின் இருக்கைக்குச் சென்று அமர்ந்து சில்மிஷம் செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பொருமை இழந்த பெண், இவரை திரும்பி கோபமாக ஒரு பார்வை பார்த்து விட்டு பேருந்தை விட்டு இறங்கிச் சென்று போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சீதாராமனைக் கைது செய்து, விசாரித்தனர். இதில், இவர் மீது ஏற்கனவே 2 பாலியல் தொந்துரவு வழக்குகள் இருந்தது தெரியவந்துள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி, சீதாராமனுக்கு 2 வாரங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்பளித்துள்ளார். மீதம் இருக்கும் இரண்டு வழக்குக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டால், சீதாராமனுக்கு அபராதத்துடன், குறைந்தது 2 வருடங்கள் சிறைத் தண்டனைக் கிடைக்கும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment