கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித், அருண் விஜய், த்ரிஷா, அனுஷ்கா நடிப்பில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி வெளிவந்தப் படம் 'என்னை அறிந்தால்'. ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இப்படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சமீபத்தில் கூறப்பட்டது.
தற்போது 50 நாட்களை கடந்து இன்னும் என்னை அறிந்தால் படம் ஒரு சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் தமிழ்நாட்டை போன்றே கனடா நாட்டிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுவரை ரஜினி நடித்த சிவாஜி, எந்திரன் ஆகிய படங்கள் தான் அங்கு 8 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடியுள்ளது. ஆனால் தற்போது அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படமும் அங்கு 8வது வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதை அறிந்த தமிழ் சினிமா பிரபலங்கள் சிலர் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் மூழ்கியுள்ளனர்.
No comments:
Post a Comment