உலகக் கோப்பையை இந்த முறையும் இந்தியா தக்க வைக்கும் என்ற கனவில் இருந்த ரசிகர்களுக்கு, நேற்று ஆஸியிடம் தோற்று வெளியேறி அதிர்ச்சியளித்தது இந்தியா.
இந்தியாவே சோகமாக இருக்கும் நிலையில் வழக்கம் போல நமது சர்ச்சை மன்னன் தனது வேலையை ஆரம்பித்து விட்டார். அதே தான், எப்போதும் போல ஒரு டுவிட்டை தட்டி விட்டார்.
அதில் ’இந்தியா தோற்றதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. எனக்கு கிரிக்கெட் பிடிக்காது. மேலும், கிரிக்கெட் ரசிகர்களை நான் வெறுக்கின்றேன். கிரிக்கெட் நம் மக்களை சோம்பேறியாக்குகின்றது. இதனாலேயே நான் அதை வெறுக்கின்றேன்.
அது மட்டுமின்றி இந்திய அணி விளையாடுவதை நிறுத்தும் வரை மற்ற நாட்டு அணிகளும் இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.’ என்று கூறியுள்ளார்.
எரியும் தீயில் எண்ணெய் ஊற்றினால் சும்மா இருக்குமா?? ரசிகர்கள் வரிந்து கட்டிக் கொண்டு டுவிட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment