இனி நடிகை குஷ்புவை யாரும் நடிகை குஷ்பு என்று அழைக்ககூடாது என்று மதுரையைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். ககாங்கிரஸில் சேர்ந்து 6 மாதத்திற்குள்ளாகவே, கட்சிப் பொறுப்புப் பெற்றவர் குஷ்பு.
இவருக்கு இந்திய தேசிய காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் பட்டம் கிடைத்துள்ளது. ஏற்கனவே, காங்கிரஸின் பெண் பிரமுகர்கள் சிலர் குஷ்பு மீது கொலை வெறியில் இருக்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் மீண்டும் குஷ்புவை ஏத்தி வைத்து பேசி வருகின்றனர்.
மதுரை, அலங்காநல்லூரில் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சுப்பாராயலு தலைமையில், கட்சி உறுப்பினர்களுக்கன அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில், நகரத்தலைவர் விநாயகராஜா, மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெயமணி, குருசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் செல்வராஜ் பாண்டியன் ஆகியோர் பங்கு பெற்றிருந்தனர்.
மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவிச்சந்திரன் கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். அடையாள அட்டை வழங்கிய கையோடு மைக்கை பிடித்தவர், குஷ்புவை ஏத்து ஏத்து என ஏத்தி பேசியுள்ளார். அவர் பேசியதாவது:
”தற்போது காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் இளங்கோவன் தலைமையேற்ற பின்னர் புதிய எழுச்சி பெற்றுள்ளது. அதேபோல் குஷ்பு காங்கிரஸ் கட்சிக்கு தேசிய செய்தி தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதால் இனிமேல் அவரை காங்கிரஸ் கட்சி கூட்டங்களில் நடிகை குஷ்பு என்று கூறக்கூடாது. தேசிய தலைவி என்றுதான் அழைக்கவேண்டும்.
காங்கிரஸ் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளான தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை, தகவல் அறியும் உரிமை சட்டம், கல்விக்கடன் போன்ற பல்வேறு திட்டங்களை மக்களிடம் முறையாக சேர்க்கப்படாத காரணத்தால்தான் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியால்தான் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்ய முடியும். மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும்.”
No comments:
Post a Comment