சமீபத்தில் வெற்றியை தனது பெயரில் கொண்டிருக்கும் இரண்டெழுத்து நடிகரின் படத்தில் நம்பர் நடிகை நடிப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக செய்திகள் வெளியானது.
இந்த செய்தியை பார்த்த திரையுலகினர் பலரும் எப்படி இவருக்கு ஜோடியாக நடிக்க நம்பர் நடிகை ஒப்புக்கொண்டார் என்று அலசி ஆராய்ந்துக்கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் தான் தீடிரென வெற்றி நடிகரை நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டார் நம்பர் நடிகை.
நம்பர் நடிகைக்கு சமீபத்தில் தான் தயாரிப்பாளர் ஒருவருடன் நிச்சயமானது. திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை. திருமணத்தையொட்டி நம்பர் நடிகை நடிப்புக்கு முழுக்கு போடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் திருமண நிச்சயதார்த்தத்துக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
ஏற்கனவே மார்ச் மாதம் நம்பர் நடிகைக்கு திருமணம் நடக்கும் என தகவல் வெளியானபோது அவர் நடித்து முடித்த படங்கள் திரைக்கு வரும்வரை திருமணத்தை தள்ளிப்போட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் தரப்பில் கோரப்பட்டது. தற்போது பட வாய்ப்புகள் நாளுக்குள் நாள் அதிகரித்து வருவதால் மீண்டும் திருமண தேதியில் குழப்பம் வருமோ என்று உறவினர்கள் சந்தேகம் எழுப்பினர்.
இதையடுத்து ஒப்புக்கொண்ட படங்களோடு தற்போதைக்கு நடித்து முடிக்கலாம், திருமணத்துக்கு பிறகு புதிய படங்களை ஒப்புக்கொள்வதுபற்றி முடிவு செய்யலாம் என நம்பர் நடிகை எண்ணியிருப்பதாக அவரது தரப்பு தெரிவிக்கிறது.
இதற்கிடையில் வெற்றி நடிகருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நம்பர் நடிகை தற்போது அப்படத்தை ஏற்க மறுத்துவிட்டாராம். நம்பர் நடிகையுடன் நடிப்பதை நினைத்து கனவு கண்டுக்கொண்டிருந்த வெற்றி நடிகர் இப்போது வருத்ததில் இருக்கிறாரம்.

No comments:
Post a Comment