லிங்கா படத்திற்கு பிறகு ரஜினி யார் படத்தில் நடிக்கிறார்.. என்ன படம்..? யார் ஜோடி..? என்றெல்லாம் ஒரு பக்கம் விவாதம் நடந்துக்கொண்டிருக்கிறது.
சமீபத்தில் கூட அவரை இயக்குவதற்காக 7 முன்னணி இயக்குநர்கள் வரிசைக்கட்டி நிற்கிறார்கள்.. ஆனால் யார் படத்தில் நடிக்க ரஜினி தலையாட்டுவார் என்றெல்லாம் செய்திகள் நாளாமூலைக்கும் பறந்தன. இந்த நிலையில் தான் சைலண்டாக ரஜினி கிரேசி மோகனை சந்தித்து காமெடியாக ஒரு கதை தயார் பண்ணுங்கள் என்று கூறியிருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பு பேச்சு கிளம்பியுள்ளது.
ரஜினி நடித்த காமெடி படங்களான தில்லுமுல்லு, குரு சிஷ்யன் படங்கள் வசூலிலும் வெற்றி பெற்றதோடு, ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவையும் பெற்றன. ஆனால் கடந்த சில படங்களான சிவாஜி, எந்திரன், கோச்சடையான் என ஆக்ஷன், சீரியஸ் படங்களிலேயே தொடர்ந்து நடித்து வந்தார் ரஜினி.
இதனால் தான் தற்போது முழுநீள காமெடி படம் ஒன்றி்ல் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம் ரஜினி. இதுதொடர்பாக, கிரேசி மோகனை, சில நாட்களுக்கு முன் ரஜினி சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. ரஜினி நடிப்பில் உருவான அருணாச்சலம் படத்தின் திரைக்கதையை, கிரேசிமோகன் தான் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகர் கமலின் ஆஸ்தான எழுத்தாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment