Friday, 27 March 2015

தேசிய விருது சிறுவர்களுக்கு தங்க சங்கிலி பரிசளித்த தனுஷ்….!


மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படமான "காக்கா முட்டை" சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான தேசிய விருதையும் மற்றும் அந்த படத்தில் நடித்த சிறுவர்களான விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளனர்.
M.மணிகண்டன் இயக்கி G.V.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை வொண்டர்பார் பிலிம்ஸ் (தனுஷ்), க்ராஸ் ரூட் பிலிம் நிறுவனம் (வெற்றிமாறன்),பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் (A.R.முருகதாஸ்) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த திரைப்படம் தேசிய விருது பெற்றதை கௌரவப்படுத்தும் விதமாக நடிகர் தனுஷ் இந்த திரைபடத்தின் கலைஞர்களுக்கு தங்க சங்கிலி பரிசளித்தார். வெற்றிமாறன் படக்குழுவினரை தனது அலுவலகத்திற்க்கு அழைத்து கேக் வெட்டி கொண்டாடினார்.

No comments:

Post a Comment