டெல்லி சட்ட சபைத் தேர்தலில் வரலாறு காணாத மாபெரும் வெற்றி பெற்றது ஆம் ஆத்மி கட்சி. யார் கண் பட்டதோ அந்த வெற்றி கிடைத்ததில் இருந்தே கட்சிக் குள் ஒரே குழப்பம் தான்.
கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் கெஜ்ரிவால் மீது அதிருப்தி தெரிவித்தனர். இதனால், கெஜ்ரிவால் இரண்டுமுறை கட்சி விலகுவதாக கடிதம் கொடுத்தார். ஆனால், எப்படியோ பேசி சமாதானம் செய்து அவரை மீட்டது கட்சி மேலிடம்.
இந்நிலையில், மீண்டும் கெஜ்ரிவாலுக்கு எதிராக புதிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷணும், யோகேந்திர யாதவும்.
டெல்லியில் இன்று நடைபெறும், ஆம் ஆத்மியின் தேசிய கவுன்சில் கூட்டம் குறித்து பேட்டி அளித்த இவர்கள் இருவரும், கெஜ்ரிவால் பற்றி சரமாறியான புகர்களை முன்வைத்துள்ளனர். இது குறித்து யோகேந்திர யாதவ் பேசியதாவது: கட்சிக்கு ரூ.2 கோடி நிதி வந்த விவகாரம் குறித்து லோக்பால் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினோம்.
காங்கிரஸ் உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கி ஆட்சி அமைக்க முயற்சித்த பிரச்சினை, மதுபானங்கள் பறிமுதல் செய்த பிரச்சினை ஆகியவற்றை எழுப்பினோம். இவற்றுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக நாங்கள் கெஜ்ரிவாலுக்கு எதிரானவர்களா என கேள்வி எழுப்புகின்றனர். கட்சி, பழைய பாதைக்கு திரும்ப வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்பினோம்.
பிற கட்சிகளின் பாதையில் ஆம் ஆத்மி நடைபோடக்கூடாது. பிரசாந்த் பூஷண் பேசுகையில், கெஜ்ரிவால் சர்வாதிகாரிபோல செயல்படுகிறார். பாராளுமன்ற தேர்தல் முடிந்த உடனேயே காங்கிரஸ் ஆதரவுடன் கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியானது. அதை நாங்கள் எதிர்த்தோம். ஆனால் ஆம் ஆத்மி அரசை ஆதரிக்க மாட்டோம் என காங்கிரஸ் அறிவித்தது.
இது கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியது என்று கூறினார். இதற்கிடையில், இந்த பேச்சைக் கேட்ட கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் இருவரையும் திட்டியதாகத் தெரிகிறது. அதை யாரோ ரகசியமாக பதிவு செய்து, வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆடியோவில், வேறு கட்சியாக இருந்தால் இந்நேரம் அவர்கள் இருவரையும் கட்சியைவிட்டே துரத்தியிருப்பார்கள் என்றும் 67 சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆம் ஆத்மி கட்சியைவிட்டே வெளியேறிவிடுவேன் என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் இது குறித்து கேட்டபோது, கோபப்பத்தில் ஆவேசப்பட்டு இப்படி, நிதானம் இழந்து பேசுவது இயல்புதான் என்று தெரிவித்துள்ளார். இதனால், இந்த விஷ்யம் டெல்லியில் இன்னும் பரபரப்பை அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment