Saturday, 28 March 2015

ஒட்டிப் பிறந்த அபூர்வ இரட்டைக் குழந்தைகள்…!


இந்தோனேசியாவில் ஜாவா பகுதியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் மார்பு, வயிறு மற்றும் ஒரு இருதயம் என்பவற்றை தம்மிடையே பங்கீடு செய்த நிலையில் அபூர்வ இரட்டைப் பெண் குழந்தைகள் புதன்கிழமை பிறந்துள்ளன.
சொயதோமா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பிறந்த மேற்படி குழந்தைகள் தனியொரு இருதயத்தைக் கொண்டுள்ளதால் அவற்றை அறுவைச்சிகிச்சை மூலம் பிரிப்பது சாத்தியமில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்தக் குழந்தைகள் தொடர்ந்து உயிர் பிழைத்திருப்பதும் சாத்தியமில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் பிரசவமாவது ஒவ்வொரு 200,000 பிறப்புகளுக்கும் ஒரு பிறப்பு என்ற ரீதியில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment